ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.41
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3953
பாசுரம்
கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.42
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3954
பாசுரம்
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.43
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3955
பாசுரம்
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.44
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3956
பாசுரம்
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.45
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3957
பாசுரம்
வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.46
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3958
பாசுரம்
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.47
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3959
பாசுரம்
சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்
கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.48
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3960
பாசுரம்
ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.49
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3961
பாசுரம்
சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.50
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3962
பாசுரம்
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70