ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.21
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3933
பாசுரம்
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.22
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3934
பாசுரம்
ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.23
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3935
பாசுரம்
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.24
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3936
பாசுரம்
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.25
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3937
பாசுரம்
பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.26
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3938
பாசுரம்
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.27
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3939
பாசுரம்
இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.28
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3940
பாசுரம்
நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.29
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3941
பாசுரம்
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.30
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3942
பாசுரம்
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50