Responsive image

பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி.71

பாசுர எண்: 2152

பாசுரம்
நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும்
விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்,
அடலாழி கொண்டான்மாட் டன்பு.       71

Summary

O Heart of mine! I pray you take heed. Disease and infirmity departing. If you were to live through the four Yugas and rule the whole Earth, -even then, never cease to love the Lord who wields the discus.

முதல் திருவந்தாதி.72

பாசுர எண்: 2153

பாசுரம்
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.       72

Summary

“The Lord who wields the discus is my love, go to him”, says my heart, “Praise his strong and beautiful arms and offer worship”, says my tongue, “See the Lord who dispersed the past”, Say my eyes, “Hear the praise of the necklace-and-garland-wearing Lord”, say my ears!

முதல் திருவந்தாதி.73

பாசுர எண்: 2154

பாசுரம்
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற்றான்.       73

Summary

Praise him or blame him, -O Heart of mine!, -honour him or dishonour him, the Lord accepts all; for does he not contain the mighty ocean, the mountains, plains, winds, bodies and lives, all within himself? He wears a cool Tulasi garland.

முதல் திருவந்தாதி.74

பாசுர எண்: 2155

பாசுரம்
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.       74

Summary

The Lord, -whose mount is the Garuda bird, who tore Hiranya’s chest, who has a dark gem-hue, who keeps the lotus dame on his chest,  who wears a tall crown, and who raised his foot high that Brahma washed, -protects Siva, who rides the bull, destroyed the three cities, wears ash, is woman-by-half, wears mat-hair, and took the Ganga waters on his head.

முதல் திருவந்தாதி.75

பாசுர எண்: 2156

பாசுரம்
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.       75

Summary

The heads that worship your feet will always see the path. O       Lord Tirumal! those who seek your protection are rid of karmas. Those who seek you are freed of bondage, Those who think of you never grow old.

முதல் திருவந்தாதி.76

பாசுர எண்: 2157

பாசுரம்
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங்கடம்.       76

Summary

The age-old Vedas declare that those who worship you by proper method will attain perfect self-knowledge.  But love for you as the Lord who measured the Earth grants the complete world of Vaikunta, O Lord of Venkatam!

முதல் திருவந்தாதி.77

பாசுர எண்: 2158

பாசுரம்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.       77

Summary

In Venkatam He stands; In the glorious sky. He sits; in Vehka He reclines; In the bowered city of Kovalur, he strikes, Even saying this will end our suffering.

முதல் திருவந்தாதி.78

பாசுர எண்: 2159

பாசுரம்
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.      78

Summary

Who likes to suffer? Arise, O Heart! The Lord who rests on the serpent of a thousand hoods came to the rescue of the elephant caught in the crocodile’s jaws. With fresh Punnai flowers, let us worship his feet.

முதல் திருவந்தாதி.79

பாசுர எண்: 2160

பாசுரம்
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?      79

Summary

As your feet stretched, your jewelled hands reached out into the Quarters, -when you begged Mabail for land, then grew and took the Earth. Everybody cries fowl on the receiver of the gift, does no one blame the giver?

முதல் திருவந்தாதி.80

பாசுர எண்: 2161

பாசுரம்
அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்?       80

Summary

Promising protection, the large hearted Lord gave the snake sumukha into the hands of the snake’s sworn enemy Garuda, when the clung to his bedstead seeking refuge, knowing this, will anyone go to serve a god other than our adorable wonder lord?

Enter a number between 1 and 4000.