Responsive image

பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி.41

பாசுர எண்: 2122

பாசுரம்
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு       41

Summary

Mountain-like faults will be ignored, only your good deeds will be taken into account, O Heart of mine! From this day onwards and forever, always contemplate and prate, -even if it were mere lip-service, -the glories of the discus wielder, the lord of Sri.

முதல் திருவந்தாதி.42

பாசுர எண்: 2123

பாசுரம்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?       42

Summary

Sri, Bhu and Nila attend on him in the ocean which sprays milk, while the adorable ocean-hued Lord, reclines on a hooded serpent. His heart is forever given to the lotus-dame Lakshmi How so? She knows at heart.

முதல் திருவந்தாதி.43

பாசுர எண்: 2124

பாசுரம்
மனமாசு தீரு மறுவினையும் சார,
தனமாய தானேகை கூடும், - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.       43

Summary

The heart will be freed of dross, all past karmas will vanish, wealth will come of its own accord, -when the Lord of fresh Tulasi garland is worshipped with flowers and fresh water. Such is his grace on devotees.

முதல் திருவந்தாதி.44

பாசுர எண்: 2125

பாசுரம்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.       44

Summary

Devotees get to see the Lord in the forms they wish to see him dearly.  His takes the name they wish to call him by, He is of the nature they contemplate in their heart dearly.  He is the discus-wielding lord.

முதல் திருவந்தாதி.45

பாசுர எண்: 2126

பாசுரம்
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு.      45

Summary

The Lord is accessible to the gods, But more, he is accessible to us fool The Rakshasa king Ravana worshipped Brahma.  but our Lord counted the ten heads of the foe with his toes.  Let us count his glories.

முதல் திருவந்தாதி.46

பாசுர எண்: 2127

பாசுரம்
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரி_ல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்.       46

Summary

The glorious vedic-chanter-Brahma’s skull became a begging bowl for Rudra. Out Lord filled with the sap of his heart and freed him of his curse. Know that those who offer worship will rule this world like celestials.

முதல் திருவந்தாதி.47

பாசுர எண்: 2128

பாசுரம்
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.       47

Summary

The celestial elephant in distress was saved by the Lord in the yore.  Those who fame their five rutted-elephant-like senses and fix their heart in steadfast contemplation will surely see the Lord’s feet.

முதல் திருவந்தாதி.48

பாசுர எண்: 2129

பாசுரம்
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே. மகிழ்.      48

Summary

With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.

முதல் திருவந்தாதி.49

பாசுர எண்: 2130

பாசுரம்
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது.       49

Summary

The joy of seeing the first-cause Lord, “Who wears a golden crown of radiance spreading all around can be felt only by those who strive to shake off births in this body that continue cyclicallly like the Magil seed beads in the abacus; for others it is difficult.

முதல் திருவந்தாதி.50

பாசுர எண்: 2131

பாசுரம்
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது.       50

Summary

Those who perform loving service, strewing freshly culled flowers, can see the feet of the Lord who look the gift of Earth from Marbali with ease.

Enter a number between 1 and 4000.