Responsive image

பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி.21

பாசுர எண்: 2102

பாசுரம்
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே. அறி.      21

Summary

Alas, O Dark Heart of mine! The Lord Senkanmal who went to Marbali and took a gift of land, then grew and measured the Earth, has a discus for weapon, a bird for vehicle and a serpent for a bed, You must attain his feet, know it.

முதல் திருவந்தாதி.22

பாசுர எண்: 2103

பாசுரம்
அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
தாம்பேகொண் டார்த்த தழும்பு.       22

Summary

It is known to the whole world, -not just me, – O Lord who rides the Garuda bird! You ate the fragrant butter churned by the Bamboo-slim arms of the Gopis, and were fethered by a rope that left your stomach with a mark.

முதல் திருவந்தாதி.23

பாசுர எண்: 2104

பாசுரம்
தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.       23

Summary

There was a mark on your fingers left by the Sarnga bow-string.  The cart left a mark on your foot when you kicked it.  When you tore apart Hiranya’s chest, frightening even lotus dame Lakshmi, that let a mark on your fingers!

முதல் திருவந்தாதி.24

பாசுர எண்: 2105

பாசுரம்
விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?,
ஓங்கோத வண்ணா. உரை.      24

Summary

When your fingers and lips were smeared with butter, -O Lord dark as the deep ocean!, -the cowherd dame Yasoda bound you to a mortar.  Did you not weep and cry, while outsiders stood and watched? Speak.

முதல் திருவந்தாதி.25

பாசுர எண்: 2106

பாசுரம்
உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்
வரைமேல் மரகதமே போல, - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி யெழும்.       25

Summary

With spoken words my heart sees the dark emerald gem of a mountain reclining in the ocean. He came as a boar and lifted the Earth, he parted the ocean. Forever I shall praise and offer worship.

முதல் திருவந்தாதி.26

பாசுர எண்: 2107

பாசுரம்
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.      26

Summary

Offering worship in Tiruvenkatam, those who constantly think of the Tulasi-garland Lord will be rid of their load of karmas. Even the celestials’ hearts are roused by the hill.

முதல் திருவந்தாதி.27

பாசுர எண்: 2108

பாசுரம்
மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
காக்கோடு பற்றியான் கை.       27

Summary

A hill, inverted, became an umbrella to protect the cows.  The Lord fore the horse kesin’s jaws and pierced an arrow through seven trees, plucked a tusk of the rutted elephant, and destroyed the Kurundu trees, Such is the power in the lord-of-Venkatam’s hands!

முதல் திருவந்தாதி.28

பாசுர எண்: 2109

பாசுரம்
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
தைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத் திறை.       28

Summary

Your hands, -O cloud-hued Lord! -wield the conch and discus. The lotus-dame Lakshmi resides on your chest.  Brahma resides on your lotus-navel, and occupying a small portion of your frame is the three-city destroyer, Siva-lord.

முதல் திருவந்தாதி.29

பாசுர எண்: 2110

பாசுரம்
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.       29

Summary

The Lord who is manifest as the Earth, space, wind, water and fire is the adorable red-eyed senkanmal who gave refuge to the devotee-elephant in distress, Know it clearly.

முதல் திருவந்தாதி.30

பாசுர எண்: 2111

பாசுரம்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.       30

Summary

Clearing their hearts of dross, clear-thinking seers of steadfast devotion,  easily attain the feet of the Tulasi-garland Lord, like the calf finding the mother-cow through love.

Enter a number between 1 and 4000.