Responsive image

பொய்கையாழ்வார்

முதல் திருவந்தாதி.1

பாசுர எண்: 2082

பாசுரம்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.       1

Summary

The Earth is my lamp, the ocean is the oil, and the radian sun the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.

முதல் திருவந்தாதி.2

பாசுர எண்: 2083

பாசுரம்
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.       2

Summary

The ocean was churned, -when I do not know. The ocean you made a bridge on, parted, and slept on, -was it not that one? You took the Earth-gift, -where, I do not know, the Earth you made, lifted, ate and remade, -was it not this Earth?

முதல் திருவந்தாதி.3

பாசுர எண்: 2084

பாசுரம்
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில்
பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.       3

Summary

You took the Earth, will one foot straddling the space and one foot placed on the ocean’s edge. Your grew and grew, I know not how!

முதல் திருவந்தாதி.4

பாசுர எண்: 2085

பாசுரம்
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன்.       4

Summary

How the poison-throated siva tought Yoga to Daksha, Pulastya. Agastya and Markandeya under the peepul free! They closed the battle-gates of their five senses and realised you as their only path to freedom!

முதல் திருவந்தாதி.5

பாசுர எண்: 2086

பாசுரம்
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரை_ல் மறையுறையும் கோயில், - வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.       5

Summary

His names are Hara and Narayana; his mounts the bull and the bird; his texts, the Agamas and Vedas; his abodes the mount kaliasa and the Ocean of Milk, his works dissolution and protection; his weapons the spear and the discuss; his hue, the fire and the cloud; and yet he is one to all.

முதல் திருவந்தாதி.6

பாசுர எண்: 2087

பாசுரம்
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.      6

Summary

All ye people! I can never forget the ocean-hued Lord! Then when I lay in the womb I folded my hands in worship. Now I note the southern Quarter which the lord of Arangam is facing, -Yama’s Quarters.

முதல் திருவந்தாதி.7

பாசுர எண்: 2088

பாசுரம்
திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத
வண்ணன் படைத்த மயக்கு.       7

Summary

The Quarters, the respective gods, in each Quarters, they ways to propitiate the respective gods, -all these are the wonders created by krishna, the changeless eternal wonder-Lord, the dark ocean-hued Lord who churned the ocean in the yore.

முதல் திருவந்தாதி.8

பாசுர எண்: 2089

பாசுரம்
மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,
போராழிக் கையால் பொருது?      8

Summary

In the battle of the yore, -O Lord Tirumali-you below the wonderful conch and wielded the sharp discus, But why did you hide the bright sun in the sky with a chariot wheel?

முதல் திருவந்தாதி.9

பாசுர எண்: 2090

பாசுரம்
பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?       9

Summary

O Lord of discus! Taking a huge form you stretched your lotus feet and measured the Earth, even as the world feared and the celestials frembled, Whenyou came as a huge boar and lifted the Earth on your tusk teeth, how did it not fall off, resting as it was on one tooth alone?

முதல் திருவந்தாதி.10

பாசுர எண்: 2091

பாசுரம்
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோ வுன் வாய்?       10

Summary

Alone the Lord of infinite glory! O discus wielder! They say it is true that you swallowed the Earth, the mountains, the oceans, the winds and space. Come to think, was your mouth as big as this Earth?

Enter a number between 1 and 4000.