Responsive image

பேயாழ்வார்

மூன்றாம் திருவந்தாதி.11

பாசுர எண்: 2292

பாசுரம்
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்
_ற்கடலான் _ண்ணறிவி னான். 11

Summary

The Lord is the substance of the Vedas. He is a mountain stream sweeter than honey, He is the hue of the dark ocean.  He reclines on a serpent in the Ocean of Milk. He is the ocean of knowledge for men of learning. He is subtle knowledge.

மூன்றாம் திருவந்தாதி.12

பாசுர எண்: 2293

பாசுரம்
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும்
பைங்கோத வண்ணன் படி. 12

Summary

What is subtle knowledge? Close the doors of the senses and apply on them the locks of discrimination.  Then study the revelatory works repeatedly, and try to understand their meaning.  Gradually the ocean-hued Lord will reveal himself, through Yoga.

மூன்றாம் திருவந்தாதி.13

பாசுர எண்: 2294

பாசுரம்
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு. 13

Summary

The Yogic Lord in the yore accepted a gift of land, then grew and strode the Earth.  His crown ripped through space and extended beyond the universe.

மூன்றாம் திருவந்தாதி.14

பாசுர எண்: 2295

பாசுரம்
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து. 14

Summary

This will become easy to understand if you give up the embrace of dames, and study the revelatory texts. Set your heart on the Lord. He is the four vedas, the resident of venkatam; his feet are worshipped by celestials, Bow to him.

மூன்றாம் திருவந்தாதி.15

பாசுர எண்: 2296

பாசுரம்
பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15

Summary

He who reclines in the deep ocean of waves, on a called serpent with a thousand hoods and gem-red eyes. Has come to recline in my lowly tossing heart! What a wonder!

மூன்றாம் திருவந்தாதி.16

பாசுர எண்: 2297

பாசுரம்
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று. (2) 16

Summary

By the tossing sea of Tiruvallikeni, -Where corals and pearls washed ashore liken the evening sky and the lamps they light of dusk, -they Lord has come to reside, along with the lotus lady who graces his auspicious chest. He is my master.

மூன்றாம் திருவந்தாதி.17

பாசுர எண்: 2298

பாசுரம்
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய். 17

Summary

Becoming his slave, let my tongue forever praise his lotus feet without fall, saying senkanmai is our adorable Lord.  Then all the days gone by, all the days of the future, and all other days will be good days.

மூன்றாம் திருவந்தாதி.18

பாசுர எண்: 2299

பாசுரம்
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். 18

Summary

O! The good day when you came as a manikin, and begged Mabali for three strides of land, then measured the Earth! Grant that I may serve your feet through seven I cs and live without fear.  O , Towering Lord!

மூன்றாம் திருவந்தாதி.19

பாசுர எண்: 2300

பாசுரம்
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19

Summary

The Lord who swallowed the seven worlds and slept as a child will never deny his grace, But those who come to him first, with a tranqull mind, strewing fresh flowers at his feet with folded hands, will receive his grace first.

மூன்றாம் திருவந்தாதி.20

பாசுர எண்: 2301

பாசுரம்
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
திருமாலே. செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே. நீயிதனைப் பேசு. 20

Summary

For the first cause Lord who swallowed and remade the Earth, is it any big feat to come again and measure it in two strides?, O, senkamall O, Tirumall our lord and Master! Speak.

Enter a number between 1 and 4000.