பெருமாள்_திருமொழி
பெருமாள் திருமொழி.21
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 667
பாசுரம்
அல்லிமாமலர் மங்கைநாதன்
அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில்
என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன்
கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
தொண்டர்தொண்டர்க ளாவரே 2.10
Summary
This sweet of decad of Tamil songs, by Kulasekara, Ruler of Kolli, King of Kudal(Madurai) saying, “When will I join the band of devotees in Arangam where the Lord resides with lotus-dame Lakshmi?”, –those who master it will be devotees of the Lord.
பெருமாள் திருமொழி.22
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 668
பாசுரம்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே 3.1
Summary
I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.
பெருமாள் திருமொழி.23
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 669
பாசுரம்
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2
Summary
My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.
பெருமாள் திருமொழி.24
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 670
பாசுரம்
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3
Summary
Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.
பெருமாள் திருமொழி.25
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 671
பாசுரம்
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4
Summary
I am not at ease with the worldly lot who run after gourmet food and fancy clothes. I crave for the Lord of the Universe, my Lord Aranga who sucked the ogress Putana’s breasts.
பெருமாள் திருமொழி.26
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 672
பாசுரம்
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5
Summary
I will not be one with those who abandon the virtuous path and do wrong things. I am mad for the first-Lord Aranga, the cowherd-Lord, the bridegroom of lotus-dame-Lakshmi.
பெருமாள் திருமொழி.27
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 673
பாசுரம்
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6
Summary
I neither mix with non devotees nor consider living like Lords a virtue. My Lord of Arangam, –my master for seven lives, –is the Lord of gods. I only crave for him.
பெருமாள் திருமொழி.28
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 674
பாசுரம்
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.7
Summary
The Lord weaned me away from mixing with just anyone for just anything. “My Mater!”, “My Aranga!”, I call, mad for the love of my own sweet Lord.
பெருமாள் திருமொழி.29
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 675
பாசுரம்
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.8
Summary
To the world I am mad. To me the world is mad. Alas! What use dilating on this? “O Cowherd-Lord!”, I call, mad with love for the Lord of Arangam, My master.
பெருமாள் திருமொழி.30
அருளியவர்: குலசேகர_ஆழ்வார்
பெருமாள்_திருமொழி
பாசுர எண்: 676
பாசுரம்
அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே 3.9
Summary
These songs by Kulasekara, King of the Western tract, sung with extreme madness for the discus-wielding-Lord Aranga are offered at his feet with devotion. Those who master it will have no affliction here or hereafter.