பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.981
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1928
பாசுரம்
மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,
அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை,
சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்
எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.7
Summary
O Bridegroom Lord with strong beautiful wrestling arms! We understood your intentions last night itself. You leave without telling, and never return as promised. O, What is this, what is this, what is this?
பெரிய திருமொழி.982
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1929
பாசுரம்
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,
தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,
எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.8
Summary
O pure one who entered the lake and shook the dancing snake! All this while we meant nothing you, You have many befitting ladies in your keep. O what is this, What is this, What is this?
பெரிய திருமொழி.983
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1930
பாசுரம்
ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்
கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,
தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,
ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.9
Summary
While the lotus-dame Lakshmi and Earth Dame stood waiting, you went with the cowherd dames and rocked and rolled in the Kuravai dance. O soft one! O Dear! O, what is this, what is this, what is this?
பெரிய திருமொழி.984
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1931
பாசுரம்
அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி
எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை,
சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே (2) 10.8.10
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Summary
This garland of songs by strong armed Kaliyan recalls the lover;s quarrel of a cowherd-dame at night. Those who sing it as praise for the Lord will be rid of miseries
பெரிய திருமொழி.985
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1932
பாசுரம்
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த
பூதனை மாள, இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த
ஊக்க மதனை நினைந்தோ,
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள்
காரிகை மாதர் கருத்தும்,
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப்
பேசுவ தெந்தை பிரானே. (2) 10.9.1
Summary
O Lord! You speak lightly of our coiffured daughter;s love for your and the slander of the ladies, as if it were easy to retrieve her heart, like the proverbial cup from a child;s hands. Is it because you could destroy the ogrees Putana and burn the city of Lanka with ease?
பெரிய திருமொழி.986
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1933
பாசுரம்
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி
மால்விடை யேழும டர்த்து, ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த
ஆண்மைகொ லோவறி யேன் நான்,
நின்ற பிரானே. நீள்கடல் வண்ணா.
நீயிவள் தன்னை நின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா
முன்கை வளைகவர்ந் தாயே. 10.9.2
Summary
O Venkatam Lord! O Lord of deep-ocean hue! You stood at the cross roads and danced in joy, subdued seven dark buls, and saved the cows in distress! Was it a show of manliness that you stole the bangles from this girl;s hands -as deftly as the proverbial honey from the home garden;s Murugai tree? I do now know
பெரிய திருமொழி.987
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1934
பாசுரம்
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி
ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,
கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம்
கடந்தநின் கடுந்திறல் தானோ,
நேரிழை மாதை நித்திலத் தொத்தை
நெடுங்கடல் அமுதனை யாளை,
ஆரெழில் வண்ணா. அங்கையில் வட்டாம்
இவளெனக் கருதுகின் றாயே. 10.9.3
Summary
O Dark-cloud Lord! O beautiful Lard! Then in the yore you wielded a conch and discus, This jewelled girl, this garland of pearls, is sweet as ambrosia, You destroyed the mighty kamsa with ease! Is it that power of your that you take her to be as easy as the proverbial candy in her hands?
பெரிய திருமொழி.988
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1935
பாசுரம்
மல்கிய தோளும் மானுரி யதளும்
உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த
கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு
வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ. இவளைநீ யுங்கள்
தொண்டர்கைத் தண்டென்ற வாறே 10.9.4
Summary
O Lord is it exulting in the goodness of your giving a place in your person to the deer-skin-wearer Siva, or you confidence in destroying Narakasura with bare hands, that you never deem it necessary to come and see this coiffured dame whose rouge you snatched then? Do not think she is as easy to retrieve as the proverbial bow from a servant;s hands. Alas, what use saying this?
பெரிய திருமொழி.989
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1936
பாசுரம்
செருவழி யாத மன்னர்கள் மாளத்
தேர்வலங் கொண்டவர் செல்லும்,
அருவழி வானம் அதர்படக் கண்ட
ஆண்மைகொ லோவறி யேன்நான்,
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை
சீர்மையை நினைந்திலை யந்தோ,
பெருவழி நாவற் கனியினு மெளியள்
இவளெனப் பேசுகின் றாயே 10.9.5
Summary
In the great Bharata war you drove chariot and despatched many mighty kings to sky through the difficult path of death, Is is your manly pride that you do not think of our soft-spoken daughter;s good qualities? I do not know. You treat her like the proverbial rose-apples fallen bythe wayside
பெரிய திருமொழி.990
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1937
பாசுரம்
அரக்கிய ராகம் புல்லென வில்லால்
அணிமதி ளிலங்கையர் கோனை,
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற
சேவக மோசெய்த தின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம்
கொண்டுமுன் னேநின்று போகாய்,
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல்
என்செய்வ தெந்தை பிரானே. 10.9.6
Summary
Our Lord and Master! You entered the fortified Lanka city and destroyed the mighty Rakshasa king, leaving his wives bereaved. Gods in the sky came and worshipped you then, Is this how you show your valour now? You take our red-berry-lipped girl;s ivory bangles from her wrist and never show yourself to her. Like the proverb, why swing an axe to fell a milkweed leaf?