பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.961
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1908
பாசுரம்
மான முடைத்துங்க ளாயர் குலமத
னால்பிறர் மக்கள் தம்மை
ஊன முடையன செய்யப் பெறாயென்
றிரப்ப னுரப்ப கில்லேன்
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன்
நங்கைகாள். நானென் செய்கேன்?
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத்
தயிர்கடை கின்றான் போலும். 10.7.1
Summary
O Ladies! I could only plead with him and say, “Your cowherd-talk are respectable people. Please do not go about destroying the neighbours; daughter;s. I could not scold him, nor could Nandagopa do anything. If looks like he and a maiden are churning curds in the outhouse. Alas, what can I do?
பெரிய திருமொழி.962
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1909
பாசுரம்
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப்
போகின்றேன் கண்டே போனேன்,
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால்
மற்றுவந் தாரு மில்லை,
மேலை யகத்துநங் காய். வந்து காண்மின்கள்
வெண்ணெ யேயன்று, இருந்த
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன்
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.2
Summary
O Lady of the main house, Yasoda! Nobody else came here, other than the flower-decked dark haired krishna, Nanda;s son I saw him as I went out to sell this buttermilk, I churned this morning. Come here and see! Not only the butter, the ten pitches of milk, I had saved are also empty. O what shall I do, what shall I do?
பெரிய திருமொழி.963
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1910
பாசுரம்
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி
மேலைத் தடாநி றைந்த,
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை
வாரி விழுங்கி யிட்டு,
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள்
கையெல் லாம்நெய், வயிறு
பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும்
பேதையேன் என்செய் கேனோ. 10.7.3
Summary
O Ladies! This wily child with clean I sleeps innocently after gulping but that was heaped like a white mountain the pitcher set on the rope shelf hanging from the ceiling. His hands are smeared with butter. His stomach is not what a normal child would have, it can fit the seven worlds into itself. O Dear me, what shall I do, what shall I do?
பெரிய திருமொழி.964
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1911
பாசுரம்
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற
வளைவண்ண நன்மா மேனி,
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது
அவனி வைசெய் தறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை
போகின்ற வாதவழ்ந் திட்டு,
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.4
Summary
The collyrium-lined spear-sharp-eyed; good dame Devaki had another son, too,-of pure complexion, white as a conch. He too grew up here, but he never did such things. Just see the way this rascal, repository of mischief goes crawling under like a child. As long as this fellow resigns, thee is no deliverance for use cowherd-dames. Alas, what shall I do, what shall I do?
பெரிய திருமொழி.965
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1912
பாசுரம்
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன்
தோழிமா ராரு மில்லை,
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை
யாடு மிடம்கு றுகி,
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப்
படிறன் படிறு செய்யும்,
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய்.
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.5
Summary
O Lady Yasoda! My flower-coiffured-daughter was playing oil by herself; Her father had not returned. I too was not here. None of her companions were with her. This naughty son of Nanda went there, snatched her ball, grabbed her dress and tore it. What can we do to stop him? Alas, what shall I do, what shall I do?
பெரிய திருமொழி.966
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1913
பாசுரம்
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்
நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே
அல்லிற் றான்வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக்
கமலச் செவ்வாய்வெ ளுப்ப,
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய்.
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.6
Summary
O Lady Yasoda! This Nanda;s child is the husband of Dame Earth and Lord of lotus-dame lakshmi. Playing a need flute at night he entered our hamiet. There after my daughter;s flowery-eyes dropped, her breasts tightened, here lotus lips paled, the colour drained from her cheeks. O. What shall I do, what shall I do?
பெரிய திருமொழி.967
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1914
பாசுரம்
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென்
றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப்
பெய்த அதனை யெல்லாம்,
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண்
டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி
வளைத்துண் டிருந்தான் போலும். 10.7.7
Summary
O Lady Yasoda! From the days of yore, the cowherd talk celebrate a festival for the thousand-eyed indra bringing cartloads of good food-offering to the hill, If seems your wonderful son went there today and, assuming a ghoul form, gobbled up all of it in one sweep!
பெரிய திருமொழி.968
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1915
பாசுரம்
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர்
ஓர்க்குடன் துற்றிடு மென்று,
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற்
கெள்கி யிவனை நங்காய்
சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என்
றிரப்பன் உரப்ப கில்லேன்,
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப்
பேசுவ தஞ்சு வேனே. 10.7.8
Summary
O Lady Yasoda! All the cowherd dams warned me that this fellow will empty every pitcher of milk, curds, Ghee and buttrmilk, Heeding them, I called him up, and only pledded, -did not scold, -“O Lord, I beg of you, please doe not do this”, After he sucked the ogress breast, I am afraid to even talk to him!
பெரிய திருமொழி.969
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1916
பாசுரம்
ஈடும் வலியும் உடையவிந் நம்பி
பிறந்த ஏழு திங்களில்,
ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி
யமுனை நீராடப் போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து
திருவடி யால்,மலை போல
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
உரப்புவ தஞ்சு வேனே. 10.7.9
Summary
Look at the Vast wealth of radiance all around. Know that all these are his, and merge into him.
பெரிய திருமொழி.970
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1917
பாசுரம்
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள்.
ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற
பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில்
என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ .
என்செய்கே னென்செய் கேனோ . 10.7.10
Summary
O Ladies, I fear to speak of this, O Lard! Your soft-footed friends have not left even half of the thousand pots of Ghee I had saved. Alas, Kamsa is cruel. I have to pay my taxes to him within a week, I have no savings. Your acts have broken my heart. Alas, what shall I do, what shall I do?