Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.301

பாசுர எண்: 1248

பாசுரம்
போதலர்ந்த பொழில்சோலைப்
புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும்
தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம்
வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
திருத்தேவ னார்தொகையே (4.1.1)

Summary

In the fertile fields of Nangur, bees sing ‘Te-tena’, in sweet modes. The mighty river Manni flows by, lashing waves that spill the pollen from lotus thickets. On the Southern banks of the river, the Lord resides permanently in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.302

பாசுர எண்: 1249

பாசுரம்
யாவருமா யாவையுமா
யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை
வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
திருத்தேவ னார்தொகையே (4.1.2)

Summary

He stands as everything and everyone, and as the substance of Vedas. He is the first-cause Lord, he is the Three too. He resides permanently at Nangur surrounded by fields, worshipped by the gods, attended by Vedic seers who win over strong-armed horse-riding kings, in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.303

பாசுர எண்: 1250

பாசுரம்
வானாடும் மண்ணாடும்
மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான்
தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத்
தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.3)

Summary

The celestial world, the Earth-world, the souls and all else, –our Lord and masters is all these. He resides at Nangur, with the Vedic seers, who command the abiding wealth of the Vedas, amid nectar-dripping fragrant groves in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.304

பாசுர எண்: 1251

பாசுரம்
இந்திரனு மிமையவரும்
முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின்
றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.4)

Summary

Indra and the horde of celestials. Brahma and the chanting bards, the Sun god and the Moon god, all stand and worship, chanting, “Grace us!”. The Lord resides permanently at Nangur amid beautiful groves in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.305

பாசுர எண்: 1252

பாசுரம்
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம்
ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும்
திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத்
திருத்தேவ னார்தொகையே (4.1.5)

Summary

The Lord who swallowed the Universe, –the oceans, the continents, the mountains and all else, –resides at Nangur on the Southern  banks  of the river Manni, which  washes bright gems, gold, fragrant Sandal and Agil wood, amid well versed Vedic seers in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.306

பாசுர எண்: 1253

பாசுரம்
ஞாலமெல்லா மமுதுசெய்து
நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில்
பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும்
தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத்
திருத்தேவ னார்தொகையே (4.1.6)

பெரிய திருமொழி.307

பாசுர எண்: 1254

பாசுரம்
ஓடாத வாளரியி
னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால்
பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத்
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு
திருத்தேவ னார்தொகையே (4.1.7)

Summary

The Lord, who came as a wonder-man-lion and tore apart the Asura Hiranya’s chest with sharp claws, resides at Nangur among bright Vedic seers, –whose wealth of knowledge should go on record, –amid the fragrant groves in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.308

பாசுர எண்: 1255

பாசுரம்
வாராரு மிளங்கொங்கை
மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த
தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத்
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.8)

Summary

The Lord who broke the great, heavy bow and married the tender corseted dame Maithili resides permanently at Nangur with bright Vedic seers abounding in knowledge-wealth amid the beautiful groves of Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.309

பாசுர எண்: 1256

பாசுரம்
கும்பமிகு மதயானை
பாகனொடும் குலைந்துவிழ
கொம்பதனைப் பறித்தெறிந்த
கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின்
மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.9)

Summary

The pot-dancer Lord who broke the tusk of the rutted elephant and killed the mahout together with it, resides permanently at Nangur amid groves I of freshly blossoming Senbakam, surrounded by golden walls and orchards in Tiruttevanar Togai.

பெரிய திருமொழி.310

பாசுர எண்: 1257

பாசுரம்
காரார்ந்த திருமேனிக்
கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத்
திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன்
கூறுதமிழ் பத்தும்வல்லார்
எரார்ந்த வைகுந்தத்
திமையவரோ டிருப்பாரே (4.1.10)

Summary

This garland of sweet Tamil songs by sharp-speared Kaliyan speaks of the dark hued Lord Krishna who resides permanently in the excellent groves of Nangur’s Tiruttevanar Togai. Those who master it will enter the good Vaikunta and live in the company of the celestials.

Enter a number between 1 and 4000.