பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.1031
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1978
பாசுரம்
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. 11.3.7
Summary
Even though we have placed krishna in our hearts, I wonder why the bangles on our hands do not stay! What mysteries are these? Well have we girls taken care of our femininity ! And yet, we shall not fall to sing the praises of Venkata and Arangam, where he resides.
பெரிய திருமொழி.1032
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1979
பாசுரம்
பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. 11.3.8
Summary
O Good Heart! Do we not sing the Lord;s praise? Do we not recite his thousand names and dance? Do we not recall his names and wear the Tulasi garland worn by him? Wearing if, -if he desires it, -will we not unite with him as well?
பெரிய திருமொழி.1033
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1980
பாசுரம்
நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. 11.3.9
Summary
O Good Heart! The Lord resides permanently in swan-lake-surrounded-fertile-fields Tiruvali, Offering flowers at the golden hued feet of the dark-cloud Lord, we have rid ourselves of our age-old karmic past!
பெரிய திருமொழி.1034
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1981
பாசுரம்
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே (2) 11.3.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Summary
This is a garland of sweet Tamil songs by Kaliyan, blest to sing the praise of the Lord of a thousand names. Those who learn to sing it will never satiate, Lo! They will rule the whole Earth, Even those who merely hear it, will be rid of sorrow.
பெரிய திருமொழி.1035
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1982
பாசுரம்
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம்
உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை
என்ன அரணாவ னென்னு மருளால்
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட
ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை
மாலை மறவா திறைஞ்சென் மனனே. (2) 11.4.1
Summary
When the whole world was deep in deluge waters, even the gods above were made to live in fear. “Lord our Master! Sole Refuge, O! Maker! Grant us a place to be”, they said, Lord! You came then as fish in deep ocean, hauling mountain-like rocks on thy frame, splashing mirthfully, gliding on your belly I praise, and never fail, O Heart! the Avatara!
பெரிய திருமொழி.1036
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1983
பாசுரம்
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று
சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும்
குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற்
பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன்மை அடலாமை
யான திருமால் நமக்கொ ரரணே. 11.4.2.
Summary
Winding the strong white-fanged serpent Vasuki over the huge mountain Mandara, the gods and Asuras churned the white Ocean of Milk, sending waves all around, that frightened Heaven and Earth. The Lord Tirumal then came as a strong tortoise and bore the mountain on his back. That Avatara is our protector and king.
பெரிய திருமொழி.1037
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1984
பாசுரம்
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர்
உம்ப ருலகேழி னோடு முடனே,
மாதிர மண்சு மந்து வடகுன்று
நின்ற மலையாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட
லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,
ஆதிமுன் ஏன மாகி அரணாய
மூர்த்தி அதுனம்மை யாளு மரசே. 11.4.3.
Summary
In the beginning the Lord came as a boar, and grew big. The spotless Moon, the bright sun, the gods and seven celestial worlds, the eight Quarters, the mount Meru and the other six mountains, the seven oceans, all fitted within the arch of his hoot. That Avatara is our protector and king.
பெரிய திருமொழி.1038
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1985
பாசுரம்
தளையவிழ் கோதை மாலை யிருபால்
தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,
அளவெழ வெம்மை மிக்க அரியாகி
அன்று பரியோன் சினங்க ளவிழ,
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன
தாகம் மதியாது சென்றொ ருகிரால்
பிளவெழ விட்ட குட்ட மதுவைய
மூடு பெருநீரில் மும்மை பெரிதே. 11.4.4.
Summary
In the yore, the Lord came as a strong man-lion His garlands of flowers and gems swung wildly on either side, his glowing red round eyes came bulging out. The haughty king Hiranya;s reign of terror ended. The haughty king Hiranya;s reign of terror ended. With sharp curved claws, he tore into the chest of the mighty Asura. The blood that spewed then was three times bigger than the flood the deluge waters! Once the Lord came as a manikin, full all ripe knowlede and Vedic chants and asked for a gift of three strides of land. Receiving if, he grew, and raised his foot over the seven worlds, up into the sky. The moon stood in praise, the lotus-bord Brahma bowed in obeisance. That Avatara is our protector and king.
பெரிய திருமொழி.1039
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1986
பாசுரம்
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி
அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி
வைய முடிமூன் றிரந்து பெறினும்,
மந்திர மீது போகி மதிநின்றி
றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,
அந்தர மேழி னூடு செலவுய்த்த
பாதம் அதுநம்மை யாளு மரசே. 11.4.5.
Summary
The Lord of Sri, Bhu and Nila once came with a battleaxe and destroyed twenty one crowned kings in battles. He is the one who swallowed the universe and remade if from his stomach, That Avatara is our protector and king forever.
பெரிய திருமொழி.1040
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1987
பாசுரம்
இருநில மன்னர் தம்மை யிருநாலும்
எட்டு மொருநாலு மொன்று முடனே,
செரு_த லூடு போகி யவராவி
மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை
நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய
ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே. 11.4.6.
Summary
The wicked Ravana came to the forest hut when the beautiful sharp-eyed Sita was alone, and abducted her. Our Lord Tirumai Singled out the wonder-deer from the herd and killed it. He then rained fire-spitting arrows over the Rakshasa;s Lanka haunt and routed the city. That Avatara is our protect for and king.