பெரிய_திருமடல்
பெரிய திருமடல்.71
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2743
பாசுரம்
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன் 31
பெரிய திருமடல்.72
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2744
பாசுரம்
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான் 32
பெரிய திருமடல்.73
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2745
பாசுரம்
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர், 33
பெரிய திருமடல்.74
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2746
பாசுரம்
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள 34
பெரிய திருமடல்.75
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2747
பாசுரம்
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?, 35
பெரிய திருமடல்.76
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2748
பாசுரம்
பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு, 36
பெரிய திருமடல்.77
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2749
பாசுரம்
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,
பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்
பொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல், 37
பெரிய திருமடல்.78
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2750
பாசுரம்
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர் 38
பெரிய திருமடல்.79
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2751
பாசுரம்
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய், 39
பெரிய திருமடல்.80
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2752
பாசுரம்
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த 40