Responsive image

பெரிய_திருமடல்

பெரிய திருமடல்.61

பாசுர எண்: 2733

பாசுரம்
அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்
மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,      21

பெரிய திருமடல்.62

பாசுர எண்: 2734

பாசுரம்
உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,
தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,       22

பெரிய திருமடல்.63

பாசுர எண்: 2735

பாசுரம்
பொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்       23

பெரிய திருமடல்.64

பாசுர எண்: 2736

பாசுரம்
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,
மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு      24

பெரிய திருமடல்.65

பாசுர எண்: 2737

பாசுரம்
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,       25

பெரிய திருமடல்.66

பாசுர எண்: 2738

பாசுரம்
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,
பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்       26

பெரிய திருமடல்.67

பாசுர எண்: 2739

பாசுரம்
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்
கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,       27

பெரிய திருமடல்.68

பாசுர எண்: 2740

பாசுரம்
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,      28

பெரிய திருமடல்.69

பாசுர எண்: 2741

பாசுரம்
பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது       29

பெரிய திருமடல்.70

பாசுர எண்: 2742

பாசுரம்
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,       30

Enter a number between 1 and 4000.