Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.667

பாசுர எண்: 3457

பாசுரம்
தீர்மருந் தின்றி யைந்து நோயடும்
      செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
      ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி
      யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ. 7.1.5

Summary

These five senses swirl me in a giant-wheel causing me incurable sicknesses.  O Lord of celestials, you routed the wicked Asura clan; O Lord of radiant discus! Now who will be my medicine?  Alas, you are like the executioner who blocks the front, back and the sides

திருவாய்மொழி.668

பாசுர எண்: 3458

பாசுரம்
விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்
      வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய்
      யாமற்று நீயும்விட்டால்?
பண்ணு ளாய்.கவி தன்னு ளாய்.
      பத்தியினுள் ளாய்.பர மீசனே, வந்தென்
கண்ணுளாய். நெஞ்சுளாய். சொல்லுளாய்.
      ஒன்று சொல்லாயே. 7.1.6

Summary

These five senses afflict even the celestials who serve and worship you.  What can they not do to an earthling, more so when you too have left me?  O Great Lord, you are hidden in music, in poetry and in devotion.  I see you in my eyes, now in my heart, now in my speech; pray speak a word to me?

திருவாய்மொழி.669

பாசுர எண்: 3459

பாசுரம்
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
      ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
      அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 7.1.7

Summary

These fickle senses cannot stick to one path or goal. My sweet ambrosial Lord, you churned the ocean with gods and the Asuras, with a snake rolled around a mountain planted in the deep. Alas, how will ever control my senses if your grace is not forthcoming?

திருவாய்மொழி.670

பாசுர எண்: 3460

பாசுரம்
இன்ன முதெனத் தோன்றி யோரைவர்
      யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக்
      கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா.என் கண்ணா. இமையோர்தம் குலமுதலே. 7.1.8

Summary

The five senses you gave can deceived anyone as sweet ambrosia.  My Master! My Krishna!  Lord of celestials! Grant that I may be rid of timeless Maya, root and all, that I may contemplate, sing and worship your symbols and forms

திருவாய்மொழி.671

பாசுர எண்: 3461

பாசுரம்
குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில்
      வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன
      செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்.என் கண்ணா.என் பரஞ்சுடரே. 7.1.9

Summary

These five senses can fell even the gods into the shin-pit, My Krishna, my radiant effulgence, you made this Earth, and all the worlds, the standing, the moving, and the things, Grant to destruction of the five, their strength and all, heed me

திருவாய்மொழி.672

பாசுர எண்: 3462

பாசுரம்
என்பரஞ் சுடரே. என்றுன்னை அலற்றியுன்
      இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை
      வலித்தெற்று கின்றனர்
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ. 7.1.10

Summary

O Lord you churned the ocean and gave ambrosia to the gods, I wish to sing your glory and melt with love over your lotus-feet.  Instead you made me carry this log and heave a burden.  These five drag me into stormy directions, and beat me painfully, Oh!

திருவாய்மொழி.673

பாசுர எண்: 3463

பாசுரம்
கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்
      படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
      சொல்லா யிரத்து ளிப்பத்தும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. (2) 7.1.11

Summary

This decad of the thousand songs, by the devotee’s devotee’s devotee Stakopan of Kurugur on the Lord of the three qualities, -of making, keeping and breaking, -will end karmas for those who sing it night and day

திருவாய்மொழி.674

பாசுர எண்: 3464

பாசுரம்
கங்குலும் பகலும் கண் துயி லறியாள்
      கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
      தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும்
      இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்.
      இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? (2) 7.2.1

Summary

O Lord of Tiruvarangam reclining on fish-dancing waters, what have you done to my girl? She knows no sleep through night and day, she doles out tears by the handfull. She folds her hands, and says “discus”, then “lotus-Lord”, and swoons.  “How can I live without you?”, she weeps then feels the Earth

திருவாய்மொழி.675

பாசுர எண்: 3465

பாசுரம்
எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா.
      என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?
      என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும்
      முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய்.
      எங்கொலோ முடிகின்ற திவட்கே? 7.2.2

Summary

“What are you doing to me, my lotus-Lord?”, she asks with tears in her eyes, then, “What shall I do, O Ranga?”, she weeps with hot and heavy sighs. “Oh, My Karmas!”, she laments, “Come, O Dark Lord, is this proper?” you made the Earth, swallowed it, and brought to out, then measured it.  How is it going to end for her?

திருவாய்மொழி.676

பாசுர எண்: 3466

பாசுரம்
வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்
      வானமே நோக்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
      ஒருவனே. என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்
      காகுத்தா. கண்ணனே. என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.
      இவள்திறத் தென்செய்திட் டாயே? 7.2.3

Summary

Shamelessly she calls, “Gem Lord”, then sighs and stores into the say, “O My Lord who destroyed the Asuras!”, then starts to weep: ‘O My Krishna, Kakutsha, come let me see you here!”, -O Ranga, surrounded by walls, what have you done to her!

Enter a number between 1 and 4000.