Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.657

பாசுர எண்: 3447

பாசுரம்
எந்நா ளேநாம் மண்ணளந்த
      இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள்
      ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
      செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன்
      அடிக்கண் அடியேன் மேவுவதே? 6.10.6

Summary

O Lord of venkatam whom celestials worship everyday, through thought, world, deed, and praise!  I long to see the lotus-feet that spanned the Earth. O, when will the day be when I join you inseparably?

திருவாய்மொழி.658

பாசுர எண்: 3448

பாசுரம்
அடியேன் மேவி யமர்கின்ற
      அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே.
      கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே.
      திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம்
      காண நோலா தாற்றேனே. 6.10.7

Summary

O Lord of celestials, my ambrosia, staying for the love of me!  O Lord of Garuda-banner, Lord with beautiful berry lips!  O Lord of Venkatam, cure for the weeds of Karma!  No more can I rest without seeing your lotus feet.

திருவாய்மொழி.659

பாசுர எண்: 3449

பாசுரம்
நோலா தாற்றேன் நுன்பாதம்
      காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும்
      நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ
      விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால்
      வந்தாய் போல வாராயே. 6.10.8

Summary

Alas, undeservingly I crave and grieve for your lotus feet!  The blue-throated Siva, the four-faced Brahma, the subtle-minded Indra and many fish-eyed damsels surround you desirously forever.  O Lord of Venkatam, pray come as you did then, and bewitch me!

திருவாய்மொழி.660

பாசுர எண்: 3450

பாசுரம்
வந்தாய் போலே வாராதாய்.
      வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய்
      நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப்
      பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ. அடியேன் உன்பாதம்
      அகல கில்லேன் இறையுமே. 6.10.9

Summary

You never come when you seem to, and come when you only seem to.  My soul’s ambrosia!  My Lord with lotus eyes, coral lips and four arms!  O Lord of Venkatam, where brilliant gems turn night into day!  Alas, I cannot bear the separation from your feet even for a moment!

திருவாய்மொழி.661

பாசுர எண்: 3451

பாசுரம்
அகல கில்லேன் இறையும் என்
      றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன்
      றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
      அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10

Summary

O Lord, you bear the inseparable lotus-dame on your chest! O My Master of matchless fame, bearing the three worlds, O Lord of Venkatam desired by celestials and great sages!  Falling of your feet, this refugeless self has found his refuge.

திருவாய்மொழி.662

பாசுர எண்: 3452

பாசுரம்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர்.
      வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப்
      பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
      திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
      பெரிய வானுள் நிலாவுவரே. 6.10.11

Summary

This decad of the complete thousand songs by Kurugur Satakopan on Venkatam Lord –who gives refuge to devotees of his feet, -will secure the joy of Vaikunta forever.

திருவாய்மொழி.663

பாசுர எண்: 3453

பாசுரம்
உண்ணி லாவிய ஐவ ரால்குமை
      தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே. இமையோர்கள்
      ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லே.அமு தே.அப்ப னே.என்னை யாள்வானே. (2) 7.1.1

Summary

O Lord of countless good, Lord of the three worlds, worshipped by the celestials!  You heap miseries on me, through the five senses borne on this body.  You are still intent on torturing me, separating me from your lotus feet.  O My sweet ambrosia, My father, My Master!

திருவாய்மொழி.664

பாசுர எண்: 3454

பாசுரம்
என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய்
      திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லே.அமு தே.கார் முகில்வண்ண
      னே.கடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய்.வினை யேனுடை வேதியனே. 7.1.2

Summary

You have made five tyrant kings rute me, shooting pain night and day.  O Sap of the sugarcane, my dark-hued Lord, protector of the Earth and ocean! O Bearer of the lightning-discus, O this sinner’s Vedic Lord!  See, you have made sure that I do not reach your lotus feet!

திருவாய்மொழி.665

பாசுர எண்: 3455

பாசுரம்
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
      மோது வித்து,உன் திருவடிச்
சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து
      கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய்.தொண்ட னேன்மது சூதனனே. 7.1.3

Summary

You have made these five senses stay and obstruct my path with mines. You are the first-cause, you made this universe, then spanned and lifted it.  O Lord with a tall radiant crown, this servant’s own Madhusudana!  Alas, what have you achieved by not letting me join your feet?

திருவாய்மொழி.666

பாசுர எண்: 3456

பாசுரம்
சூது நானறி யாவகை சுழற்றியோர்
      ஐவரைக் காட்டி,உன் அடிப்
போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்
      ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி. வினையேன் வினைதீர் மருந்தே. 7.1.4

Summary

You planted these five senses like snares around me leaving no room for escape, you placed all things and beings without exception in your person, then slept as a child floating on a fig leaf.  O The medicine for my karmas! See, you have made me incapable of joining your lotus feet

Enter a number between 1 and 4000.