Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.647

பாசுர எண்: 3437

பாசுரம்
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 6.9.7

Summary

You are the karmic souls roaming the Earth, You are the soul of the world itself.  You are the formless ten spheres and the spirit beyond,  Pray grace this tiny self of infinite ignorance.

திருவாய்மொழி.648

பாசுர எண்: 3438

பாசுரம்
அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி. அடியேன் நெடுமாலே,
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 6.9.8

Summary

O Soul of the mortals, pray grace this ignorant self.  My fragrant icon-Lord of infinite radiance! Will you still keep away and kill me with your tricks?  Alas, knowing nothing else.  My soul is afflicted!

திருவாய்மொழி.649

பாசுர எண்: 3439

பாசுரம்
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 6.9.9

Summary

My soul is afflicted by pleasures that the senses heap, would you still destroy me with distractions? Has the time not come for me to be united to your lotus-feet, -that grew and strode the Earth?

திருவாய்மொழி.650

பாசுர எண்: 3440

பாசுரம்
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 6.9.10

Summary

My Lord1 For many endless ages that neither shrink nor stretch, if I were to attain the infinite pleasures of the self, -Alas!  On reflection –will that ever match even a short while of service to you without returns?

திருவாய்மொழி.651

பாசுர எண்: 3441

பாசுரம்
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே. 6.9.11

Summary

This decad of the thousand revelations of devotee’s devotees’ devotee Satakopan on the Lord beyond sight, though and feeling will secure the feet of the Lord who swallowed the Earth.

திருவாய்மொழி.652

பாசுர எண்: 3442

பாசுரம்
உலகம் உண்ட பெருவாயா.
      உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.
      நெடியாய். அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
      திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
      கூடு மாறு கூறாயே. 6.10.1

Summary

O Lord of eternal glory who swallowed the Earth! O Great icon of effulgent knowledge, my soul’s master!  You stand like a Tilaka for the Earth in Venkatam, Pray decree that this bonded serf reaches your lotus feet.

திருவாய்மொழி.653

பாசுர எண்: 3443

பாசுரம்
கூறாய் நீறாய் நிலனாகிக்
      கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி
      வலவா. தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்தீ
      மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன்
      அடிசேர் வண்ணம் அருளாயே. 6.10.2

Summary

O Lord of celestials bearing a fierce discus in hand that cuts, pulverises and grinds to dust the wicked Asura-clans! O Lord of Venkatam with water-tanks that brim with lotuses like fire! Grace that this love-brimming servant joins you lotus test.

திருவாய்மொழி.654

பாசுர எண்: 3444

பாசுரம்
வண்ண மருள்கொள் அணிமேக
      வண்ணா. மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே. இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத்
      தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ண லே.உன் அடிசேர
      அடியேற் காவா வென்னாயே. 6.10.3

Summary

O Lord of celestials, beautiful cloud-hued natural grace, O Ambrosia! Wonder-Lord, entering sweetly into feeling! O Lord of Venkatam where rivulets wash gems, pearls and gold!  My Lord, inquire of me and grant me your lotus feet.

திருவாய்மொழி.655

பாசுர எண்: 3445

பாசுரம்
ஆவா வென்னா துலகத்தை
      அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த
      சிலையா. திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன்
      பொருந்து மாறு புணராயே. 6.10.4

Summary

O Lord of lotus-dame Lakshmi, you rained fire-arrows ending the days of the heartless.  Asuras who troubled the Earth!  O Lord of Venkatam adored by gods, Asuras and Munis! Pray show this lowly self the way to your lotus feet.

திருவாய்மொழி.656

பாசுர எண்: 3446

பாசுரம்
புணரா நின்ற மரமேழன்
      றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின்
      நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு
      சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துன்பாதம்
      சேர்வ தடியே னெந்நாளே? 6.10.5

Summary

O Deft archer who pierced an arrow through seven trees! O First-Lord who went between the two Marudu trees!  O Lord of Venkatam where elephants resemble dark clouds! O Wielder a the heavy sarngo-bow, when will I reach your feet.

Enter a number between 1 and 4000.