Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.617

பாசுர எண்: 3407

பாசுரம்
பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 6.6.10

Summary

My intelligent daughter has lost her all, -to the bautiful fall-crown-Tulasi-blossom-Lord whose wondrous arms matched the wrestlers, who stands in all the things that are.

திருவாய்மொழி.618

பாசுர எண்: 3408

பாசுரம்
கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.6.11

Summary

This beautiful radiant decad of the thousand by beautiful radiant kurugur’s satakopan on the beautiful radiant kurugur’s Satakopan on the beautiful radiant Venkatam Lord gives beautiful radiant celestials’ joy.

திருவாய்மொழி.619

பாசுர எண்: 3409

பாசுரம்
உண்ணுஞ் சோறு பருகுநீர்
      தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென்
      றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்
      கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு
      மூர்திருக் கோளூரே. 6.7.1

Summary

With tears in her eyes my tender fawn would say; “My food, drink and the Betel I chew, are all my Krishna”, I am sure she has found her way to Tirukkolur, enquiring about his town of fame and fortune on Earth.

திருவாய்மொழி.620

பாசுர எண்: 3410

பாசுரம்
ஊரும் நாடும் உலகும்
      தன்னைப்போல், அவனுடைய
பேரும் தார்களு மேபிதற்றக்
      கற்பு வானிடறி,
சேருநல் வளஞ்சேர் பழனத்
      திருகோ ளூர்க்கே,
போருங் கொலுரை யீர்க்கொடி
      யேன்கொடி பூவைகளே. 6.7.2

Summary

Throwing her grace to the winds, -like herself, making the town and country prate his names and symbols, -my tender fawn must have reached Tirukkolur of fertile fields, Alas, hapless me Tell me. O Mynahs! Will she return?

திருவாய்மொழி.621

பாசுர எண்: 3411

பாசுரம்
பூவை பைங்கிளிகள் பந்து
      தூதைபூம் புட்டில்கள்,
யாவையும் திருமால் திருநாமங்
      களேகூவி யெழும்,என்
பாவை போயினித் தண்பழனத்
      திருக்கோ ளூர்க்கே,
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணோ
      டென்செய் யுங்கொலோ? 6.7.3

Summary

Her mynahs, her parrots, her ball, her toys, and flowers boxes were all the ‘the Lord’ for her, -she used to call them by his names, Alas! My doll is now in fertile Tirukkolur itself. With raining eyes and twitching lips, what would she be doing?

திருவாய்மொழி.622

பாசுர எண்: 3412

பாசுரம்
கொல்லை யென்பர்கொ லோகுணம்
      மிக்கனள் என்பர்கொலோ,
சிலலை வாய்ப்பெண் டுகளயற்
      சேரியுள் ளாருமெல்லே,
செல்வம் மல்கி யவன்கிடந்த
      திருக்கோ ளூர்க்கே,
மெல்லிடை நுடங்க இளமான்
      செல்ல மேவினளே. 6.7.4

Summary

What now? Will the wags in the neighborhood call this an act of shamelessness or of high conduct?  Alas, my tender fawn decided to leave to Tirukkolur swinging her hips, where the Lord lives with abundant wealth!

திருவாய்மொழி.623

பாசுர எண்: 3413

பாசுரம்
மேவி நைந்து நைந்துவிளை
      யாடலுறா ளென்சிறுத்
தேவிபோய், இனித்தன்
      திருமால் திருக்கோ ளூரில்,
பூவியல் பொழிலும் தடமும்
      அவன்கோ யிலுங்கண்டு,
ஆவியுள் குளிர எங்ஙனே
      யுகக்குங்கொல் இன்றே? 6.7.5

Summary

My little goddess gave up her toys and faded day by day.  Now she is with her beloved Lord inTirukkolur amid flower gardens, water tanks and in his temple. I wonder how she enjoys herself today!

திருவாய்மொழி.624

பாசுர எண்: 3414

பாசுரம்
இன்றெனக் குதவா தகன்ற
      இளமான் இனிப்போய்,
தென்திசைத் திலத மனைய
      திருக்கோ ளூர்க்கே
சென்று,தன் திருமால் திருக்கண்ணும்
      செவ்வாயும் கண்டு,
நின்று நின்று நையும்
      நெடுங்கண்கள் பனிமல்கவே. 6.7.6

Summary

My little fawn is of no use to me anymore. She has left me and gone to Tirukkolur where her Lord stands as a Tilaka to the South, Would she be standing in a swoon, -with tears in her eyes, -waiting to see her Lord’s auspicious red eyes and lips?

திருவாய்மொழி.625

பாசுர எண்: 3415

பாசுரம்
மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே? 6.7.7

Summary

With overflowing teas and longing heart, night and day she would call, “Ancient Lord!” Now she has gone to Tirukkolur where her Lord lives amid riches.  Alas, I wonder how she would have reached, with trailing steps and a shrivelled frame!

திருவாய்மொழி.626

பாசுர எண்: 3416

பாசுரம்
ஒசிந்த நுண்ணிடை மேல்கையை
      வைத்து நொந்துநொந்து,
கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண
      நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,
ஒசிந்த வொண்மல ராள்கொழுநன்
      திருக்கோ ளூர்க்கே,
கசிந்த நெஞ்சின ளாயெம்மை
      நீத்தஎ ம் காரிகையே? 6.7.8

Summary

Resting her hands on her waist, dragging herself painfully, did she walk with a seething heart and brimming eyes to reach the Lord of the lotus-dame in Tirukkolur? Alas, my daughter has forsaken me for her Love!

Enter a number between 1 and 4000.