Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.557

பாசுர எண்: 3347

பாசுரம்
உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. 6.1.5

Summary

O Swan pair, you know how to make peace after a quarrel  My Lord wearing a Tulasi garland on his crown resides inTiruvan-vandu where conches fill the dunes, Go see him with folded hands and pray for me also.

திருவாய்மொழி.558

பாசுர எண்: 3348

பாசுரம்
போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. 6.1.6

Summary

O Punnai-dwelling koels, I beg of you, please! The Lord of gods with a discus in his radiant hand resides in Tiruvan-Vandur where fish jump in watered fields.  Go ask him for a reply, and rid me of my swoon.

திருவாய்மொழி.559

பாசுர எண்: 3349

பாசுரம்
ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு
      ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர்
      வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண்
      செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை
      யாளம் திருந்தக் கண்டே. 6.1.7

Summary

O Beautiful parrot, go this once, then speak your good words!  Flower groves and red shores surround Tiruvan-Vandur.  The Lord has a dark hue, red lips, lotus eyes and lotus feet.  Discus and conch are his identification marks.

திருவாய்மொழி.560

பாசுர எண்: 3350

பாசுரம்
திருந்தக் கண்டெனக் கொன்றுரை
      யாயொண் சிறுபூவாய்.
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை
      சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு
      நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு
      மேனி யடிகளையே. 6.1.8

Summary

O Beautiful Puvai bird, speak to my Lord and come back to me! He lives in Vandur filled with Punnai, serundi, Nalai, Kurukkatti and Magil flowers.  He ha large lotus eyes and four mighty arms, and a dark cloud-hue.  He wears a tall radiant crown.

திருவாய்மொழி.561

பாசுர எண்: 3351

பாசுரம்
அடிகள் கைதொழு தலர்மேல்
      அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு
      வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை
      நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம்
      கூறுமின் வேறுகொண்டே. 6.1.9

Summary

O Dainty swans dallying over flowers!  My Lord resides in Tiruvan-Vandur where conches herald the day, My Krishna, the ancient Lord is swift.  Pray talk to him alone, worship his feet and tell him of my plight.

திருவாய்மொழி.562

பாசுர எண்: 3352

பாசுரம்
வேறு கொண்டும்மை யானிரந்
      தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட
      பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள்
      நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை
      யுமுளள் என்மின்களே. 6.1.10

Summary

O Fragrant bees, I Pray you, because you are different Tiruvan-Vandur is on the Northern banks of the Pampa river.  The Lord who burnt to dust the high-walled Lanka resides there.  Pray tell him I too exist.

திருவாய்மொழி.563

பாசுர எண்: 3353

பாசுரம்
மின்கொள் சேர்புரி நூல்குற
      ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு
      கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை
      பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார்
      மதனர்மின் னிடையவர்க்கே. 6.1.11

Summary

This decad of the thousand songs by kurugur Satakopan on the Lord who came and took the Earth will win the hearts of damsels.

திருவாய்மொழி.564

பாசுர எண்: 3354

பாசுரம்
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ. 6.2.1

Summary

O Lord who destroyed the fortress of Lanka!  Thin-waisted damsels will worship your grace.  I fear what may follow.  I know your tricks, what can you do with them now?  Sire, return my bat and ball and leave!

திருவாய்மொழி.565

பாசுர எண்: 3355

பாசுரம்
போகுநம் பீ.உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே. 6.2.2

Summary

Go Sire! Your lotus eyes and coral smile hurt and make us faint. Alas! this is the fruit of our penance! Lovely young damsels, strutting like peacocks will worship your grace.  Go send your crows that-a-ways, and play your flute by them.

திருவாய்மொழி.566

பாசுர எண்: 3356

பாசுரம்
போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி, நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே? 6.2.3

Summary

Go away, Sire! And tell your stories to innocent ones. Your coral lips and lotus eyes are a curse to us. Wonder who that damsel with bamboo-slender arms will be, to win the fortune of your grace today?

Enter a number between 1 and 4000.