நம்மாழ்வார்
திருவிருத்தம்.41
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2518
பாசுரம்
என்றும்புன் வாடை யிதுகண்டறிதும்,இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம், ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றி, நின்றென்னைவன் காற்றடுமே. 41
திருவிருத்தம்.42
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2519
பாசுரம்
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த,
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன, மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென் பால்,எம்பிரான தடங்கண்களே. 42
Summary
When the lord grew into the sky, his eyes glanced side wards as if saying, “See, these worlds are not enough for my feet” The wind blowing over me now shows a lake full lotuses, all learning to one side.
திருவிருத்தம்.43
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2520
பாசுரம்
கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோ, எம்பிரான தெழில்நிறமே? 43
Summary
My Lord’s eyes are like lotuses. His hands are the same, his feet too are the same! His dark radiance is the hue of a huge mountain that rises over the skies, boggling the mind, over the world of celestials, beyond the comprehension of anyone, Oh!
திருவிருத்தம்.44
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2521
பாசுரம்
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று,
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும், அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால், எம்பி ரான்றன் பெருமையையே. 44
Summary
Even the learned votaries of religious texts that speak of the lord’s hue, his jewels, his names and his forms as this and this, only catch glimpses of that supreme knowledge which stands as a radiant beacon, but can never attain even a little of that glory-flood, Alas!
திருவிருத்தம்.45
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2522
பாசுரம்
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவர்நம்போல்
வரும்கேழ் பவருள ரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறு மே, சொல்லுவாழி மடநெஞ்சமே. 45
Summary
Live, O Frail Heart of mine! Tell me, The big boar-lord has turned his lotus eyes on us and made us live through many bad times. Is there anyone with such a long association as we who know him form yore? Can future births ever accost us?
திருவிருத்தம்.46
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2523
பாசுரம்
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்,அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே. 46
Summary
Those who plan an action thinking they have an obedient heart that will do as they bid, may as well give up their plans, I sent my heart to the feet of the lord who tore the steely heart of the Asura Hiranya. Alas, he-my heart –has remained there firmly and never once returned to me, to date.
திருவிருத்தம்.47
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2524
பாசுரம்
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும்,என் னாங்கொலென் மெல்லியற்கே? 47
Summary
She only bowed to Krishna’s sky-abode, Alas! The dew-laden breeze blows with the heat of the Moon, while the Moon itself sizzles. Her bangles are slipping. Desiring the cool Tulasi garland, her whole body pales. Alas, what is going to happen to our slender one?
திருவிருத்தம்.48
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2525
பாசுரம்
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில் மிளிர்தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்,என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்?
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே. 48
Summary
I am like the famished maggot born in a fester which knows only to wriggle in the fester; what other world can it know? The lord Tirumal connives to make me sing his praise, but what poetry do I know? And yet, even a lizard’s fut is taken as spoken world, this is so from time immemorial.
திருவிருத்தம்.49
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2526
பாசுரம்
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய, மண் ணேரன்ன ஒண்ணுதலே. 49
Summary
O Bright Girl! Your forehead has the radiance of the Earth that the dark-hued bee-humming Tulasi-garland lord Madhusudana, Damodara, swallowed, remade and straddled. Earlier too we have seen many dark colours, but never known on heard of such darkness as this.
திருவிருத்தம்.50
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2527
பாசுரம்
ஒண்ணுதல் மாமை ஒளிபயவாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று, தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடிவெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய்யாநிற்கும் மாமலைக்கே. 50
Summary
O Deft one, drive our chariot speedily before the girl’s bright forehead pales, before her colour fades. We have to reach the great bee-humming hill of venkatam where streams drop to Earth like strings of pearls from the crown to feet of the lord.