Responsive image

நம்மாழ்வார்

திருவாய்மொழி.1037

பாசுர எண்: 3827

பாசுரம்
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. (2) 10.5.1

Summary

Those of you who seek Krishna’s feet, meditate on his name; Narayana is the Mantra

திருவாய்மொழி.1038

பாசுர எண்: 3828

பாசுரம்
நாரணன் எம்மான்
பாரணங்காளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே. 10.5.2

Summary

Narayana, out Lord, spouse of Dame Earth, killer of rutted elephant, in his own cause

திருவாய்மொழி.1039

பாசுர எண்: 3829

பாசுரம்
தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே. 10.5.3

Summary

He made the Universe, He lifted it.  He swallowed it and remade it.  He is the protector

திருவாய்மொழி.1040

பாசுர எண்: 3830

பாசுரம்
ஆள்வான் ஆழிநீர்
கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு
நாள்வாய் நாடீரே. 10.5.4

Summary

The Ruler reclines on a serpent, in the ocean.  Strew flowers at his feet and worship him everyday

திருவாய்மொழி.1041

பாசுர எண்: 3831

பாசுரம்
நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே. 10.5.5

Summary

Worship him every day, with fresh flowes and sing his name, liberation is here

திருவாய்மொழி.1042

பாசுர எண்: 3832

பாசுரம்
மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட
வாயான் மாதவனே. (2) 10.5.6

Summary

The Kaya-hued Lord resides in Venkatam,  He is Madava, who drank Putana’s breasts

திருவாய்மொழி.1043

பாசுர எண்: 3833

பாசுரம்
மாதவன் என்றென்று
ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா
ஏதம் சாராவே. 10.5.7

Summary

If you can sing Madava’s names, no hard will come, nor sin attain you

திருவாய்மொழி.1044

பாசுர எண்: 3834

பாசுரம்
சாரா ஏதங்கள்
நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே. 10.5.8

Summary

Free of faults, he who sings the names of the Cloud-Hued Lord will live like the gods

திருவாய்மொழி.1045

பாசுர எண்: 3835

பாசுரம்
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே. 10.5.9

Summary

He evades the gods and gives himself to devotees ending their karmas

திருவாய்மொழி.1046

பாசுர எண்: 3836

பாசுரம்
வினைவல் இருளென்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு
நினைமின் நெடியானே. 10.5.10.

Summary

Karmas in hordes will flee in fear, strew lotus flowers and contemplate on him

Enter a number between 1 and 4000.