Responsive image

நம்மாழ்வார்

பெரிய திருவந்தாதி.4

பாசுர எண்: 2588

பாசுரம்
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?

Summary

My heart is wedded to the Lord, my dark radiant Krishna, of ocean-like glory-flood effulgence.  Who in the world is more celebrated than we? Come to think, can there be such a one other than me?

பெரிய திருவந்தாதி.5

பாசுர எண்: 2589

பாசுரம்
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ
மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா. காட்டும் நெறி.

Summary

O wonder Lord! You are the child-bearing mother, you are the birth-giving father, you are all the people spoken of.  O Lord who drank the poison breast of the ogress!  How wonderful one your ways?

பெரிய திருவந்தாதி.6

பாசுர எண்: 2590

பாசுரம்
நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோ ம் யாம்?

Summary

O Krishna! Will you only show us the way to your feet and disappear? Or will you show us your dark radiant frame as well?  We do not know what lies ahead.  Pray tell us what you intend. Whatever you do will surely affect us.

பெரிய திருவந்தாதி.7

பாசுர எண்: 2591

பாசுரம்
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா. நின் பாதத் தருகு.

Summary

O Lord with line lady of the lotus adoring your chest! O Lord who measured the Earth! My heart has already attained your feet. Alas, we sinners alone are still for away.

பெரிய திருவந்தாதி.8

பாசுர எண்: 2592

பாசுரம்
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய
_ண்புடையீர் _ம்மை _மக்கு.

Summary

O Lord, sweet as ambrosia! You are too subtile to be seen by our sinner-selves” eyes, Nor do we know the clues by which to attain you, yet our love for your swells.  How come? Pray speak!

பெரிய திருவந்தாதி.9

பாசுர எண்: 2593

பாசுரம்
_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.

Summary

O Heart!  When even his beloved ones find it difficult to approach him, what use our pleading, “We are your slaves”, thus and thus piteously?  Let anything happen to us, you keep on thinking about him.

பெரிய திருவந்தாதி.10

பாசுர எண்: 2594

பாசுரம்
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்?

Summary

The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvis, -being none of these, who are we to the Lord? What is our worship to him? Alas, O Heart! We have only a boastful tongue.

பெரிய திருவந்தாதி.11

பாசுர எண்: 2595

பாசுரம்
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.

Summary

Your engaged a boastful Rakshasa in a battle and took his sweet life.  Does this behave your valour? –when you are the Earth, you are the sky, you are the wind, you are the Fire, You are the water, and you are yourself as well!

பெரிய திருவந்தாதி.12

பாசுர எண்: 2596

பாசுரம்
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.

Summary

O Heart! Have you not cast me into deep despair by your actions?  What use dilating on this?  Go, you were never the one to heed even my best advice.  Know that praising Krishna is the only good.

பெரிய திருவந்தாதி.13

பாசுர எண்: 2597

பாசுரம்
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே,
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்?

Summary

O Lord! this is no breach of conduct, you could make on exception for your devotees, it is no great loss.  I Pray you, at least because we are your devotees, let our eyes see the radiance of your dark frame.

Enter a number between 1 and 4000.