நம்மாழ்வார்
திருவிருத்தம்.91
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2568
பாசுரம்
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே. 91
Summary
The Lord who came and stole butter from the rope-shelf, who swallowed the whole universe in one gulp, and who went to Mabali as on adorable manikin and tricked him, alone is my heart’s desire. I shall not serve anyone else.
திருவிருத்தம்.92
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2569
பாசுரம்
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதிவாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நீன்னைவிண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே. 92
Summary
The celestials prayed that you raze the city of Lanka island of the merciless Rakshasa, which you did by setting your foot on Earth in mortal form. But do they every worship you night and day, that they may be blest to see even a part of your many-splendoured beautiful frame?
திருவிருத்தம்.93
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2570
பாசுரம்
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே. 93
Summary
The wicked ones of darkness that flee in the morning before the Sun rises return in the evening when the sun sets, and crows the Earth everyday. Even seeing this, no one turns his thoughts to the dark-hued lord, no one bathes in the wisdom-tank every morning, no one wakes up inwardly and offers praise to the lord Tirumal Alas!
திருவிருத்தம்.94
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2571
பாசுரம்
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே? 94
Summary
Only the pure Vedic seers are fit to wear your excellent lotus-feet on their heads. Like a blind cow going out to graze, with the herd I too, offered praise, what else can I say of my lowly self?
திருவிருத்தம்.95
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2572
பாசுரம்
யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்ன மே,அதனால்
யாதானும் பற்றிநீங் கும்விரதத்தைநல் வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே. 95
Summary
Seeing every soul fall and flounder through repeated cycles of birth and death in various bodies, the lord Tirumal-benevolent as mother and father, -comes to our rescue and frees us before we get stuck in needless despair, I worship him.
திருவிருத்தம்.96
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2573
பாசுரம்
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96
Summary
O Lord without a peer! You made all these many modes of worship. You made all these conflicting schools of thought, and in each one of them you made all these many gods; and in all of them, you spread your peerless form. My heart swells with lover for you!
திருவிருத்தம்.97
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2574
பாசுரம்
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோ கண்கள் துஞ்சுதலே? 97
திருவிருத்தம்.98
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2575
Summary
The sleepless Minis who overcome the pangs of repeated births, and all others, worship the lord without a peer or superior, who is the lord of celestials too. But the wonder of his coming to steal butter is beyond their comprehension indeed!
திருவிருத்தம்.99
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2576
பாசுரம்
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே 99
Summary
To the celestials in the sky, the mortals on Earth and to all others, here is what I know and declare; Other than the lord of knowledge, the lord who came as a boar and lifted the Earth, there is no god, if these words be fowl, let them be.
திருவிருத்தம்.100
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2577
பாசுரம்
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே 100
Summary
The lord Tirumal is worshipped by good devotees in kurugur city. This work of a hundred verses was sung by Maran satakopan who wears the feet of those who recite his names as a garland around his neck. Those who master it will never get stuck in the mysterious quagmire of miserable births.