Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.81

பாசுர எண்: 2871

பாசுரம்
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4

Summary

Forever I shall praise the Lord who stood holding a mountain high that revealed his glory.

திருவாய்மொழி.82

பாசுர எண்: 2872

பாசுரம்
வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான்,
பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. 1.8.5

Summary

Without a doubt the Lord who stole butter, and ate with both hands, is blended in me.

திருவாய்மொழி.83

பாசுர எண்: 2873

பாசுரம்
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,
புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6

Summary

Blending into my soul, he bears my good.  As a charming lad he measured the Earth.

திருவாய்மொழி.84

பாசுர எண்: 2874

பாசுரம்
கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. 1.8.7

Summary

He swallowed the seven worlds, he slew seven bulls, his cool resort is my consciousness.

திருவாய்மொழி.85

பாசுர எண்: 2875

பாசுரம்
ஆனா னானாயன், மீனோ டேனமும்,
தானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8

Summary

For the love of me, he become the cowherd, and the fish, and the boar too.

திருவாய்மொழி.86

பாசுர எண்: 2876

பாசுரம்
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,
எங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9

Summary

Our Lord who appeared in all forms bears a discus and conch on beautiful hands.

திருவாய்மொழி.87

பாசுர எண்: 2877

பாசுரம்
நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான்,
ஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10

Summary

My Lord and master who measured the Earth is praised by the Vedas, like waves of the ocean.

திருவாய்மொழி.88

பாசுர எண்: 2878

பாசுரம்
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,
நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11

Summary

This decad by satakopan, in the thousand sons, sings the glories of the ocean-hued Lord.

திருவாய்மொழி.89

பாசுர எண்: 2879

பாசுரம்
இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்,
அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,
அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்,
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1

Summary

The Lord is first-cause of all things and beings everywhere, he contains all in himself, then makes them again and protects them, My Lord, my ambrosia, the taste of sweetness, is the spouse of Lakshmi, He has entered my Vicinity.

திருவாய்மொழி.90

பாசுர எண்: 2880

பாசுரம்
சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2

Summary

My Lord kesava is the Lord of many wonders, He killed the rutted elephant; he came as a boar and lifted the Earth, he reclines in the deep ocean mystifying celestials.  He is near me now.

Enter a number between 1 and 4000.