திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி.51
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2432
பாசுரம்
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை? 51
Summary
Who is my companion but the Lord, who is his own, without a peer or superior? O Kaya-hued Lord! Nobody knows you as I do. Can the whole sky be a price for my mind?
நான்முகன் திருவந்தாதி.52
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2433
பாசுரம்
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர். 52
Summary
The Lord is the prince who drank the poison breast. Those who do not offer worship must live as coolies; they will contract many diseases, may even be offered as human sacrifice to some godling. They will remain useless, ignorant and sinful forever.
நான்முகன் திருவந்தாதி.53
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2434
பாசுரம்
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு. 53
Summary
I know of no god other than the kakutstha Lord Rama who wiped out the unrelenting Rakshasa’s Lanka city. Do not accept any non-god, bad god, or inauspicious god for worship.
நான்முகன் திருவந்தாதி.54
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2435
பாசுரம்
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை. 54
Summary
All the gods with divinity in them, the Trimurti coming down from yore, and all the sentient beings here, -all these are the lord Nedumai. Those who do not realise this have spent a lifetime learning trash.
நான்முகன் திருவந்தாதி.55
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2436
பாசுரம்
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்? 55
Summary
Way between, the celestials stand and offer worship with folded hands, and enjoy the fruits of heaven. O Lord eternal, with the hue of the ocean! Who among them can praise your feet fully? Not one.
நான்முகன் திருவந்தாதி.56
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2437
பாசுரம்
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு. 56
Summary
For Madana’s father krishna, nobody is of consequence, nobody can oppose him. Even the poison-threated Siva, who felt duty-bound to fight for Bana, lost completely to the lord.
நான்முகன் திருவந்தாதி.57
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2438
பாசுரம்
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்? 57
Summary
Come to speak, the Lord who broke the kurundu trees is alone the good and the bad of all karmas. Even the gods, the Asuras, the Earth,-What are all thee, if not the manifestations of the lord in my heart?
நான்முகன் திருவந்தாதி.58
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2439
பாசுரம்
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு. 58
Summary
Then in the yore the lord of all hearts came and measured the Earth, frightening everyone. The lord in my heart dispelled darkness, and saved me from the throes of death, I gave my love to him.
நான்முகன் திருவந்தாதி.59
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2440
பாசுரம்
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59
Summary
O Lord of lotus-dame Lakshmi My radiant kesava! You are my love! You are my ambrasial you are sweet me! You are my all you rule me without a fault! I am your humble servant.
நான்முகன் திருவந்தாதி.60
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2441
பாசுரம்
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் 60
Summary
O Lord of Arangam, precious to men of learning! You always roam around looking for your devotees. I too roam around looking for your lotus feet, Pray take note of me. My heart cannot stop loving you.