திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி.11
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2392
பாசுரம்
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
வழாவண்கை கூப்பி மதித்து 11
Summary
My Ancient Lord has a tall crown and a wreath of Tualsi over it, Contemplate on him firmly, fold your hands in obeisance of strew fresh flowers. Lower your head at his feet, let your tongue praise him, let your eyes see him, let your ears hear him.
நான்முகன் திருவந்தாதி.12
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2393
பாசுரம்
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12
Summary
O Lord! You have decided that the faithless ones should fall into the throes of fourfold birth. But you also wait for an occasion to relieve them of their curse. Did you not free the waning Moon of his curse? Did you not send your discus spinning and relive both the elephant and the crocodile of their curses?
நான்முகன் திருவந்தாதி.13
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2394
பாசுரம்
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன் 13
Summary
O People who do not understand the real nature of freedom, and go about the practising penance! Know that Narayana is the part and the goal, He is the lord spoken of in the Vedas, and the lord of celestials too.
நான்முகன் திருவந்தாதி.14
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2395
பாசுரம்
நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன், பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர் 14
Summary
Our Lord and protector is Tirumal. Misguided by those wretches who do not take the name of Narayana there are many who fall into illusion and suffer.
நான்முகன் திருவந்தாதி.15
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2396
பாசுரம்
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை 15
Summary
If you wish to learn the truth, follow the sure path of Markandeya, who worshipped with flowers and praise the Earth-straddling feet of the Lord praise by the gods.
நான்முகன் திருவந்தாதி.16
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2397
பாசுரம்
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால் 16
Summary
When the Lord of gods himself fought a war against the mighty kings of yore, killing them in battle, he hid the Sun with a chariot wheel. My hear finds refuge of him.
நான்முகன் திருவந்தாதி.17
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2398
பாசுரம்
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17
Summary
In the yore the great austerity-practising Siva tought this path to the four, -Daksha, Agastya, Pulaslya and Markandeya, -In the shade of a people tree. It was the path of worship of the Lord who measured the Earth and lay sleeping on a fig leaf.
நான்முகன் திருவந்தாதி.18
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2399
பாசுரம்
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம் 18
Summary
The ferocious man-lion that fore apart the mighty chest of the Asura Hiranya with sharp nails is out lord. The worship that his devotees offer easily wins over the praise offered to other gods.
நான்முகன் திருவந்தாதி.19
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2400
பாசுரம்
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19
Summary
O Lord who destroys the fruits of penance received from Brahma! You are the protector and the means of protection for your devotees. You are the vaikunta-giver for all souls.
நான்முகன் திருவந்தாதி.20
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2401
பாசுரம்
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும், - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை 20
Summary
O Lord! All the Universe is you, the sentient beings, are you. The austerit-god Siva, and his god Brahma to, are you. Fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are you.