Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல்.106

பாசுர எண்: 2778

பாசுரம்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,       66

பெரிய திருமடல்.107

பாசுர எண்: 2779

பாசுரம்
கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்,       67

பெரிய திருமடல்.108

பாசுர எண்: 2780

பாசுரம்
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,       68

பெரிய திருமடல்.109

பாசுர எண்: 2781

பாசுரம்
துன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வேண்ணெய்
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,      69

பெரிய திருமடல்.110

பாசுர எண்: 2782

பாசுரம்
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,       70

பெரிய திருமடல்.111

பாசுர எண்: 2783

பாசுரம்
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,      71

பெரிய திருமடல்.112

பாசுர எண்: 2784

பாசுரம்
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,       72

பெரிய திருமடல்.113

பாசுர எண்: 2785

பாசுரம்
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,       73

பெரிய திருமடல்.114

பாசுர எண்: 2786

பாசுரம்
தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்       74

பெரிய திருமடல்.115

பாசுர எண்: 2787

பாசுரம்
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,      75

Enter a number between 1 and 4000.