ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.29
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3941
பாசுரம்
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.30
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3942
பாசுரம்
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.31
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3943
பாசுரம்
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.32
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3944
பாசுரம்
பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.33
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3945
பாசுரம்
அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.34
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3946
பாசுரம்
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.35
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3947
பாசுரம்
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.36
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3948
பாசுரம்
கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.37
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3949
பாசுரம்
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி.38
அருளியவர்: ஸ்ரீராமானுஜ
ஸ்ரீராமானுஜ_நூற்றந்தாதி
பாசுர எண்: 3950
பாசுரம்
பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58