பெரிய திருமொழி.1044
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1991
பாசுரம்
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று
கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த
நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை
மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற
தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே. 11.4.10
தரவு கொச்சக் கலிப்பா
Summary
This garland of sweet tamil sangs! by well-laid out Mangai city;s king, Kalikanri sings of our Lord Tirumal who killed the deathly rutted elephant, and who entered the wicked king;s Lanka and burnt it to ashes with his flery arrows. Devotees who go about singing these songs will rule the world of celestials.
பெரிய திருமொழி.1045
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1992
பாசுரம்
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே (2) 11.5.1
Summary
“Aho, Sister! Your hero took the rocky forest path with his fawn-eyed Vaidehi, and lived in the wilderness, see!” “Yes, but the golden feet that trad the rocky forest path become the flowers that the celestials wore on their heads, so tally!”
பெரிய திருமொழி.1046
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1993
பாசுரம்
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே 11.5.2
Summary
“Aho, Sister! The One who was born to loosen the shackles on his father;s feet had to grow up as the redeemer-son of Nanda;s clan in Alppadi, See!
பெரிய திருமொழி.1047
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1994
பாசுரம்
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே 11.5.3
Summary
“Aho, Sister! With the whole world heaping slander, the Alappadi son ate the curds kept by braided-hair dames, See!”.
பெரிய திருமொழி.1048
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1995
பாசுரம்
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே 11.5.4
Summary
“Aho, Sister Going to Aippadi, he became a cow-grazer amid innocent folk, and enjoyed himself eating butter from the rope-shelf by stealth, see!”.
பெரிய திருமொழி.1049
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1996
பாசுரம்
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.5
Summary
Aho, sister! That dark-coiffured cowherd dame bound him up with a short spinous rope and beat him for stealing buter, see!”.
பெரிய திருமொழி.1050
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1997
பாசுரம்
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.6
Summary
“Aho, Sister! With drums beating like wild, he danced on stilts in the crossroads, entertaining passers-by See!”.
பெரிய திருமொழி.1051
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1998
பாசுரம்
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே 11.5.7
Summary
“Aho, Sister! For the sake the five Pandava princes he went as a messenger seeking a stretch of land, and ate words of abuse from the king Duryodhana, See!”.
பெரிய திருமொழி.1052
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1999
பாசுரம்
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே 11.5.8
Summary
“Aho, Sister! Killing the haughty kings in a terrible war when the charioteered kings took up arms and fought, he served as a chariot-driver, see!”.
பெரிய திருமொழி.1053
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 2000
பாசுரம்
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே (2) 11.5.9
Summary
“Aho, Sister! it was a pitiable sight, -he come as a small manikin to the generous Mabali;s sacrifice and begged for a piece of land, see!”.