Responsive image

பெரிய திருமொழி.994

பாசுர எண்: 1941

பாசுரம்
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி
மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப்
பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்
சித்தமும் திருவோடு மிகுமே (2) 10.9.10
வெண்டுறை

Summary

This garland of proverb-songs by sharp-spear-wielding Mangai king kaliyan is praise offered of the feet of the Lord of Tulasi garland-wreath without any desire for immediate returns.  By signing it, the heat will be filled with Bhakti and the wealth of joy.

பெரிய திருமொழி.995

பாசுர எண்: 1942

பாசுரம்
திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத்
திருத்தாய் செம்போத்தே. 10.10.1

Summary

Screech, O Red Pheasant! Sri-Dame Lord is famous, wearing Fragrant Tulasi, Madavan, Screech his arrival!

பெரிய திருமொழி.996

பாசுர எண்: 1943

பாசுரம்
கரையாய் காக்கைப்பிள்ளாய்,
கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய். 10.10.2

Summary

Caw, Caw, Good Crow, Sir! Dark as a cloud, he;s spoken of as perfection personified! Caw his arrival!

பெரிய திருமொழி.997

பாசுர எண்: 1944

பாசுரம்
கூவாய் பூங்குயிலே,
குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
கூவாய் பூங்குயிலே. 10.10.3

Summary

Coo, Coo, Good koel! Stopping a halistorm, he did teat the jaws of a mighty horse, -gem Lord! Coo his arrival!

பெரிய திருமொழி.998

பாசுர எண்: 1945

பாசுரம்
கொட்டாய் பல்லிக்குட்டி,
குடமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
கொட்டாய் பல்லிக்குட்டி. 10.10.4

Summary

Tut, tut, little Lizard! Dancing on a pot he measured the Universe, wears flower-coiffure, Madavani Tut his arrival.

பெரிய திருமொழி.999

பாசுர எண்: 1946

பாசுரம்
சொல்லாய் பைங்கிளியே,
சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள்வட வேங்கட வன்வர,
சொல்லாய் பைங்கிளியே. 10.10.5

Summary

Speak, O Green Parrot! Radiant discus-bearing strong armed Lord is in Northern Venkatam! Speak his arrival.

பெரிய திருமொழி.1000

பாசுர எண்: 1947

பாசுரம்
கோழி கூவென்னுமால்,
தோழி. நானென்செய்கேன்,
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று
கோழி கூவென்னுமால். 10.10.6

Summary

The cock is crowing. Aho! sister, what can I do? Now it;s Time for the dark one to come to me.  The cock is crowing. Aho!

பெரிய திருமொழி.1001

பாசுர எண்: 1948

பாசுரம்
காமற் கென்கடவேன்,
கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
காமற் கென்கடவேன். 10.10.7

Summary

What can I give kama? Other than serving the dark hued Lord, the Father of sugarcane-bow-wielder, what can I give kama?

பெரிய திருமொழி.1002

பாசுர எண்: 1949

பாசுரம்
இங்கே போதுங்கொலோ,
இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
இங்கே போதுங்கொலோ. 10.10.8

Summary

Will he come this way? Pleasing my dark and vel-like two eyes, kudandai Lord amid nectored groves, -will he come this way?

பெரிய திருமொழி.1003

பாசுர எண்: 1950

பாசுரம்
இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன். 10.10.9

Summary

I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.

Enter a number between 1 and 4000.