Responsive image

பெரிய திருமொழி.884

பாசுர எண்: 1831

பாசுரம்
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.9.9.40

Summary

The Lord with beautiful lotus eyes, our master, came in the yore as a lion and tore the mighty chest of Hiranya with pleasure. He is the radiant Lord residing the Tirumalirumsolai which rises tall, touching the clouds and the Moon.  Will my bright-forehead daughter attain him today? I wonder!

பெரிய திருமொழி.885

பாசுர எண்: 1832

பாசுரம்
தானவன் வேள்விதன் னில்தனி யேகு ற ளாய்நிமிர்ந்து,
வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ.9.9.5

Summary

The Lord came to the Asura Mabali;s sacrifice as a manikin, then grew as Trivikrama and measured the Earth and sky. He is the Lord of celestials residing in Tirumalirumsolai amid honey-dripping flower groves.  Will my daughter be able to bow and worship him today? I wonder!

பெரிய திருமொழி.886

பாசுர எண்: 1833

பாசுரம்
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,
தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. (2)9.9.6

Summary

The Lord who is hard to reach for those who have no love and who do not contemplate, him was born amid fragrant groves in Northern Mathura,  He is kesava the Lord worshipped by the whole world, residing in Tirumalirusolai. Will my fish-eyed daughter be able to see him today? I wonder!

பெரிய திருமொழி.887

பாசுர எண்: 1834

பாசுரம்
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.9.9.7

Summary

The Lord is our dark mountain gem krishna who tore apart the beak of the Asura-bird Baka, then plucked the tusk of the rutted elephant kuvalayapida. He smote the bedevilled can with his foot.  He is our benevolent one residing in Tirumalirumsolai. Will my bright-forehead-girl be able to worship him today? I wonder!

பெரிய திருமொழி.888

பாசுர எண்: 1835

பாசுரம்
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே. (2)9.9.8

Summary

The Lord is the dark mountain gem of the celestials who drove the charriot for Arjuna in the great Bharata war in the yore. He is the sacred icon in Tirumalirumsolai amid flower groves.  Will my well-coiffured girl at least be able to join her hands in worship today? I wonder!

பெரிய திருமொழி.889

பாசுர எண்: 1836

பாசுரம்
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே. (2)9.9.9

Summary

The Lord with mountain-like strong arms wielding a dextral conch, wearing a bright attractive thread on his shoulder.  Is the vedic Lord of venkatam. He is the good Narayana residing in Tirumalirusolai with Silambaru, Nupura Gango, flowing through it.  Will my bright-forehead girl at least be close to him today? I wonder!

பெரிய திருமொழி.890

பாசுர எண்: 1837

பாசுரம்
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,
ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. (2)9.9.10

Summary

This is a garland often sweet songs by Kalikanri, king of pennon-fluttering-mansions-Mangai tract, on a mother;s desire to unite her jewelled daughter to the Garuda-riding Lord of Tirumalirumsolai, who is hard to attain by seekers.  Those who master it will have no karmas

பெரிய திருமொழி.891

பாசுர எண்: 1838

பாசுரம்
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு
நாயகன், ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப்
பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2)9.10.1

Summary

Our own dear Lord and Master is the Lord of gods, forever residing with grace in the hearts of those who worship him.  He is the Lord of Tirukkottiyur where clouds rain streams of gold. Lighting up the place and making lotus buds blossom

பெரிய திருமொழி.892

பாசுர எண்: 1839

பாசுரம்
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை
இன்னகைத் துவர்வாய், நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை
மாலையொடு மணந்து, மாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.9.10.2

Summary

Our Lord rids us of the miseries of sickness. He enjoys the smile of red-lipped Dame Earth, and is ever-sweet to the lady of the lotus Lakshmi. The breeze blowing over his bee-humming garlands of Jasmine and Jaji spreads a heavenly fragrance in Tirukkottiyur

பெரிய திருமொழி.893

பாசுர எண்: 1840

பாசுரம்
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்
விண்ணவர் தமக்கிறை, எமக்கு
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக்
கற்றைச் சந்தன முந்தி வந்தசை,
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.9.10.3

Summary

The spotless one, the dark one, the gem-hued one, the Lord of celestials, the transcendent Lord, reveals himself to us. He swallowed the seven worlds and brought them out, He resides in Tirukkottiyur where streams in groves bring Sandal-wood and whisk-hair in heaps

Enter a number between 1 and 4000.