பெரிய திருமொழி.864
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1811
பாசுரம்
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்
பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ
பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்
கடத்துளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.4
Summary
O Heart! If you decide on escaping from the fixation of embracing the tight breasts of sweet-tongued beautiful dames, and seek the elevation of spirit, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the ocean hued Lord, who gives in Venkatam the joy that he gives to the celestials in Vaikunta
பெரிய திருமொழி.865
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1812
பாசுரம்
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்
வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ
துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்
வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.5
Summary
O Heart! They who rule the Earth as kings under cloud-touching white parasols, surrounded by canopied elephants, do one day die. If this saddens you, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the Lord who sucked the poison-breast of the ogrees and took her life
பெரிய திருமொழி.866
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1813
பாசுரம்
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி
நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம்
வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ
வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.6
Summary
O Heart! The five senses that enter the cage of flesh at birth do relentlessly cause a life of pain and misery. If you fear them, then learn to speak of the glory of Tiruvallaval, where the four vedas, the five sacrifices and the six Angas are practised perferctly
பெரிய திருமொழி.867
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1814
பாசுரம்
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை
மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய்
மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.7
Summary
O Heart! Friends lead their lives considering this disease-ridden body as real. If you find their arguments faulty, their lives futile, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the Lord who is the bright sun, the Moon, the sky and all else
பெரிய திருமொழி.868
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1815
பாசுரம்
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்
காலிவை மயங்கி நின்ற
அஞ்சுசேராக்கையை அரணமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்
பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.8
Summary
O Heart! This body is a fusion of the five elements, earth, fire, water, air and space. If you realise that this is no fortress and seek a way out, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord who resides with the Sandal-corsetted lotus-dame Lakshmi
பெரிய திருமொழி.869
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1816
பாசுரம்
வெள்ளியார் பிண்டியார் போதியார்
என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார்
மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.9
Summary
O Heart! The Raudras, the Arhatas and the Bauddhas go about quoting from heretic texts. If you realise they are not meant for you, and seek a way to elevate your spirit, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord worshipped by the celestials, the benevolent one who churned the ocean and gave them ambrosia
பெரிய திருமொழி.870
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1817
பாசுரம்
மறைவலார் குறைவிலார் உறையுமூர்
வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ்
கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய்
ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண்
டின்பநன் கெய்து வாரே. (2) 9.7.10
Summary
This is a garland of songs on the Lord of Tiruvallaval worshipped by the perfect Vedic seers, by the sharp-spear-wielding Kaliyan, king of Alinadu surrounded by beautiful bee-humming graves. Those who master it will rule as kings on Earth and rejoice in heaven
பெரிய திருமொழி.871
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1818
பாசுரம்
முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார்
கலவியை விடுதடு மாறல்
அந்தர மேழும் அலைகட லேழும்
ஆயவெம் மடிகள்தம் கோயில்,
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்
தழுவிவந் தருவிகள் நிரந்து,
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே. (2) 9.8.1
Summary
O Frail Heart! Warn you, Give up the desire for union with fragrant tressed women, it is a hindrance. The Lord who is himself the seven continents and the seven oceans resides in the temple of Malirumsolai where mountain streams wash sandalwood, gems and peacock feathers in fragrant groves everywhere, come, let us offer worship there
பெரிய திருமொழி.872
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1819
பாசுரம்
இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர்முடிக் கடவுள்தம் கோயில்
விண்டலர் தூளி வேய்வளர் புறவில்
விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.2
Summary
O Frail Heart! Gods and celestials stand endlessly with fresh garlands and pure water, to offer worship and service to the tall-crowned serpent-recliner Lord. He resides in Malirumsolai amid groves of Bambook thickets where bees collect honey from mountain flowers. Come, let us offer worship there
பெரிய திருமொழி.873
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1820
பாசுரம்
பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப்
பெருநிலம் அருளின்முன் அருளி
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும்
அளந்தவெம் மடிகள்தம் கோயில்
கணிவளர் வேங்கை நெடுநில மதனில்
குறவர்தம் கவணிடைத் துரந்த
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.3
Summary
O Frail Heart! To accept the worship that we offer, -that we may be rid of the misery of bodily, existence, -He made this wide Earth with many sacred sports. He even came as a manikin and strode the Earth. He resides in Malirumsolai amid fall groves of Vengai trees that tell the season, and where gypsies hurl gemstones from their catapult. Come, let us offer worship there