Responsive image

பெரிய திருமொழி.704

பாசுர எண்: 1651

பாசுரம்
தாராய தண்டுளப வண்டுழுத
வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன்
என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம்
வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4

பெரிய திருமொழி.705

பாசுர எண்: 1652

பாசுரம்
அடித்தலமும் தாமரையே அங்கையும்
பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத்
துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத்
துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5

பெரிய திருமொழி.706

பாசுர எண்: 1653

பாசுரம்
பேரா யிரமுடைய பேராளன்
பேராளன் என்கின் றாளால்,
ஏரார் கனமகர குண்டலத்தன்
எண்தோளன் என்கின் றாளால்,
நீரார் மழைமுகிலே நீள்வரையே
ஒக்குமால் என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6

பெரிய திருமொழி.707

பாசுர எண்: 1654

பாசுரம்
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்
சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும்
பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ
மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7

பெரிய திருமொழி.708

பாசுர எண்: 1655

பாசுரம்
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே
வருகின்றான் என்கின் றாளால்,
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே
ஒக்குமால் என்கின் றாளால்,
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம்
உய்யோமோ என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8

பெரிய திருமொழி.709

பாசுர எண்: 1656

பாசுரம்
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல்
மணநாறும் என்கின் றாளால்,
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும்
பிரிகிலேன் என்கின் றாளால்,
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில்
யாம் என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9

பெரிய திருமொழி.710

பாசுர எண்: 1657

பாசுரம்
மாவளரு மென்னோக்கி மாதராள்
மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்
தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்
இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்
மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10

பெரிய திருமொழி.711

பாசுர எண்: 1658

பாசுரம்
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள்
கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1

பெரிய திருமொழி.712

பாசுர எண்: 1659

பாசுரம்
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 8.2.2

பெரிய திருமொழி.713

பாசுர எண்: 1660

பாசுரம்
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. (2) 8.2.3

Enter a number between 1 and 4000.