பெரிய திருமொழி.694
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1641
பாசுரம்
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத்
தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,
மாய னைமதிள் கோவலி டைகழி
மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்
ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை
எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை
காசி னைமணி யைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.4
பெரிய திருமொழி.695
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1642
பாசுரம்
ஏற்றி னையிம யத்துளெம் மீசனை
இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்
ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை
நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.5
பெரிய திருமொழி.696
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1643
பாசுரம்
துப்ப னைத்துரங் கம்படச் சீறிய
தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்
செப்பி னை,திரு மங்கைம ணாளனைத்
தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி
ஒப்ப னை,உல கேழினை யூழியை
ஆழி யேந்திய கையனை அந்தணர்
கற்பி னை,கழு நீர்மல ரும்வயல்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.6
பெரிய திருமொழி.697
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1644
பாசுரம்
திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்
தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்த னை,அரி யைப்பரி கீறிய
அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற
கருத்த னை,களி வண்டறை யும்பொழில்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.7
பெரிய திருமொழி.698
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1645
பாசுரம்
வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்
கன்று வீசிய ஈசனை, பேய்மகள்
துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்
தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய
நஞ்சி னை,அமு தத்தினை நாதனை
நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,
கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்,
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.8
பெரிய திருமொழி.699
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1646
பாசுரம்
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்
பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை
வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை
மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.9
பெரிய திருமொழி.700
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1647
பாசுரம்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று
காத லால்கலி கன்றியு ரைசெய்த,
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை
வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்
மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்
கற்க லாம்கவி யின்பொருள் தானே. (2) 7.10.10
பெரிய திருமொழி.701
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1648
பாசுரம்
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண்
டொண்சங்கம் என்கின் றாளால்,
மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக்
கெற்றேகாண் என்கின் றாளால்,
முலையிலங்கு பூம்பயலை முன்போட
அன்போடி யிருக்கின் றாளால்,
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1
பெரிய திருமொழி.702
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1649
பாசுரம்
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ
கைத்தலத்த தென்கின் றாளால்,
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி
மற்றொருகை என்கின் றாளால்,
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர்
என்னப்பா என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2
பெரிய திருமொழி.703
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1650
பாசுரம்
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல்
தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள்
வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத்
திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3