Responsive image

பெரிய திருமொழி.684

பாசுர எண்: 1631

பாசுரம்
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4

பெரிய திருமொழி.685

பாசுர எண்: 1632

பாசுரம்
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 7.9.5

பெரிய திருமொழி.686

பாசுர எண்: 1633

பாசுரம்
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 7.9.6

பெரிய திருமொழி.687

பாசுர எண்: 1634

பாசுரம்
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுை றயும்
மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,
தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே (2) 7.9.7

பெரிய திருமொழி.688

பாசுர எண்: 1635

பாசுரம்
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 7.9.8

பெரிய திருமொழி.689

பாசுர எண்: 1636

பாசுரம்
கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,
பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2) 7.9.9

பெரிய திருமொழி.690

பாசுர எண்: 1637

பாசுரம்
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே (2) 7.9.10

பெரிய திருமொழி.691

பாசுர எண்: 1638

பாசுரம்
பெரும்பு றக்கட லையட லேற்றினைப்
பெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள்
தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்
பத்த ராவியை நித்திலத் தொத்தினை,
அரும்பி னையல ரையடி யேன்மனத்
தாசை யை அமு தம்பொதி யின்சுவைக்
கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. (2) 7.10.1

பெரிய திருமொழி.692

பாசுர எண்: 1639

பாசுரம்
மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்
மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,
மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை
மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,
நென்ன லைப்பக லையிற்றை நாளினை
நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,
கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.2

பெரிய திருமொழி.693

பாசுர எண்: 1640

பாசுரம்
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை
வாச வார்குழ லாள்மலை மங்கைதன்
பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப்
பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்
மங்கு லைச்,சுட ரைவட மாமலை
உச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும்
கங்கு லை,பக லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.3

Enter a number between 1 and 4000.