பெரிய திருமொழி.664
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1611
பாசுரம்
பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன்
பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே, மாதவ னே.மது சூதா.
மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்
நரனே. நாரண னே.திரு நறையூர்
நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும்
அரனே, ஆதிவ ராகமுன் னானாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.4
பெரிய திருமொழி.665
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1612
பாசுரம்
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்
பண்பா ளா.பர னே.பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை
கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.5
பெரிய திருமொழி.666
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1613
பாசுரம்
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்
சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்
தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர
கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.6
பெரிய திருமொழி.667
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1614
பாசுரம்
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்.
கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்
எந்தாய். அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப்
போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.7
பெரிய திருமொழி.668
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1615
பாசுரம்
நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ.
நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து
காவல் செய்தவக் காவலைப் பிழைத்து
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்
கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.8
பெரிய திருமொழி.669
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1616
பாசுரம்
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்
கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்
புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே.
திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.9
பெரிய திருமொழி.670
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1617
பாசுரம்
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
தூய மாலை யிவைபத்தும் வல்லார்,
மன்னி மன்னவ ராயுல காண்டு
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. (2) 7.7.10
பெரிய திருமொழி.671
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1618
பாசுரம்
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்
திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்
வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. (2) 7.8.1
பெரிய திருமொழி.672
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1619
பாசுரம்
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண
முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்
பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்
அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.2
பெரிய திருமொழி.673
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1620
பாசுரம்
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்
கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன
நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு
வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3