பெரிய திருமொழி.654
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1601
பாசுரம்
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 7.6.4
பெரிய திருமொழி.655
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1602
பாசுரம்
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே 7.6.5
பெரிய திருமொழி.656
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1603
பாசுரம்
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 7.6.6
பெரிய திருமொழி.657
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1604
பாசுரம்
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.7
பெரிய திருமொழி.658
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1605
பாசுரம்
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.8
பெரிய திருமொழி.659
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1606
பாசுரம்
பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. (2) 7.6.9
பெரிய திருமொழி.660
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1607
பாசுரம்
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. (2) 7.6.10
பெரிய திருமொழி.661
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1608
பாசுரம்
திருவுக் கும்திரு வாகிய செல்வா.
தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே.
உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்
உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. (2) 7.7.1
பெரிய திருமொழி.662
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1609
பாசுரம்
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.
சாம வேதிய னே.நெடு மாலே,
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.2
பெரிய திருமொழி.663
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1610
பாசுரம்
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்
நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய்
சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்
போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.3