பெரிய திருமொழி.644
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1591
பாசுரம்
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்
மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்
நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்
போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.4
பெரிய திருமொழி.645
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1592
பாசுரம்
பகலு மிரவும் தானேயாய்ப்
பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி
நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும்
துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும்
அணியார் வீதி அழுந்தூரே 7.5.5
பெரிய திருமொழி.646
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1593
பாசுரம்
ஏடி லங்கு தாமரைபோல்
செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து
நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம்
போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே 7.5.6
பெரிய திருமொழி.647
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1594
பாசுரம்
மாலைப் புகுந்து மலரணைமேல்
வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க
நின்றார் நின்ற வூர்போலும்
வேலைக் கடல்போல் நெடுவீதி
விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை
மறைக்கும் வீதி அழுந்தூரே 7.5.7
பெரிய திருமொழி.648
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1595
பாசுரம்
வஞ்சி மருங்கு லிடைநோவ
மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி
நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற்
பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே 7.5.8
பெரிய திருமொழி.649
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1596
பாசுரம்
என்னைம் புலனு மெழிலுங்கொண்
டிங்கே நெருந லெழுந்தருளி
பொன்னங் கலைகள் மெலிவெய்தப்
போன புனித ரூர்போலும்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட
அன்னம் பெடையோ டுடனாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.9
பெரிய திருமொழி.650
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1597
பாசுரம்
நெல்லில் குவளை கண்காட்ட
நீரில் குமுதம் வாய்காட்ட,
அல்லிக் கமலம் முகங்காட்டும்
கழனி யழுந்தூர் நின்றானை,
வல்லிப் பொதும்பில் குயில்கூவும்
மங்கை வேந்தன் பரகாலன்,
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை
சொல்லப் பாவம் நில்லாவே. (2) 7.5.10
பெரிய திருமொழி.651
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1598
பாசுரம்
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. (2) 7.6.1
பெரிய திருமொழி.652
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1599
பாசுரம்
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே 7.6.2
பெரிய திருமொழி.653
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1600
பாசுரம்
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே 7.6.3