Responsive image

பெரிய திருமொழி.624

பாசுர எண்: 1571

பாசுரம்
உரங்க ளாலியன் றமன்னர் மாளப்
பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்
எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி
ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக்
கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே 7.3.4

பெரிய திருமொழி.625

பாசுர எண்: 1572

பாசுரம்
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ
தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து
தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி
எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற,
வேங்கடத்தரி யைப்பரி கீறியை
வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட
தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை
அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே 7.3.5

பெரிய திருமொழி.626

பாசுர எண்: 1573

பாசுரம்
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும்
என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,
தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின்
தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்
கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக்
காத லால்மறை நான்குமுன் னோதிய
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென்
பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே 7.3.6

பெரிய திருமொழி.627

பாசுர எண்: 1574

பாசுரம்
பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற
பாலை யாகி யிங்கே புகுந்து,என்
கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான்
கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,
விண்ணு ளார்பெரு மானையெம் மானை
வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்
வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல்
வண்ண மேயன்றி வாயுரை யாதே 7.3.7

பெரிய திருமொழி.628

பாசுர எண்: 1575

பாசுரம்
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக்
கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்
துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்
தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்
முனியை வானவ ரால்வணங் கப்படும்
முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்
கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட
கள்வ னையின்று கண்டுகொண் டேனே 7.3.8

பெரிய திருமொழி.629

பாசுர எண்: 1576

பாசுரம்
என்செய் கேனடி னேனுரை யீர் இதற்
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே 7.3.9

பெரிய திருமொழி.630

பாசுர எண்: 1577

பாசுரம்
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
தோன்றல் வாள்கலி யன்திரு வாலி
நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன்
நல்ல மாமலர் சேவடி, சென்னியில்
சூடி யும்தொழு துமெழுந் தாடியும்
தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. (2) 7.3.10

பெரிய திருமொழி.631

பாசுர எண்: 1578

பாசுரம்
கண்சோர வெங்குருதி வந்திழிய
வெந்தழல்போல் கூந்த லாளை,
மண்சேர முலையுண்ட மாமதலாய்.
வானவர்தம் கோவே. என்று,
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு
மணிமாட மல்கு, செல்வத்
தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார்
காண்மினென் தலைமே லாரே. (2) 7.4.1

பெரிய திருமொழி.632

பாசுர எண்: 1579

பாசுரம்
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை
வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று
கொண்டெறிந்த கூத்தர் போலாம்,
வம்பலரும் தண்சோலை வண்சேறை
வானுந்து கோயில் மேய,
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும்
என்மனத்தே யிருக்கின் றாரே 7.4.2

பெரிய திருமொழி.633

பாசுர எண்: 1580

பாசுரம்
மீதோடி வாளெயிறு மின்னிலக
முன்விலகு முருவி னாளை
காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த
கைத்தலத்தா. என்று நின்று,
தாதோடு வண்டலம்பும் தண்சேறை
எம்பெருமான் தாளை யேத்தி,
போதோடு புனல்தூவும் புண்ணியரே
விண்ணவரில் பொலிகின் றாரே 7.4.3

Enter a number between 1 and 4000.