பெரிய திருமொழி.614
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1561
பாசுரம்
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.4
பெரிய திருமொழி.615
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1562
பாசுரம்
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,
ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,
பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்,
நாணதா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.5
பெரிய திருமொழி.616
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1563
பாசுரம்
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ.என் னாருயிரே. அரசே அருளெனக்கு
நந்தாமல் தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.6
பெரிய திருமொழி.617
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1564
பாசுரம்
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,
வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.7
பெரிய திருமொழி.618
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1565
பாசுரம்
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நி ன்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.8
பெரிய திருமொழி.619
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1566
பாசுரம்
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.9
பெரிய திருமொழி.620
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1567
பாசுரம்
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே (2) 7.2.10
பெரிய திருமொழி.621
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1568
பாசுரம்
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்
மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்
கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே. (2) 7.3.1
பெரிய திருமொழி.622
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1569
பாசுரம்
தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும்
தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை
அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட
வாய னை,மக ரக்குழைக் காதனை
மைந்த னைமதிள் கோவ லிடைகழி
யாயனை,அம ரர்க்கரி யேற்றையென்
அன்ப னையன்றி யாதரி யேனே 7.3.2
பெரிய திருமொழி.623
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1570
பாசுரம்
வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான்
மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச்
சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச்
சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,
கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக்
கோவி னைக்குட மாடிய கூத்தனை,
எந்தை யையெந்தை தந்தைதம் மானை
எம்பி ரானையெத் தால்மறக் கேனே? 7.3.3