பெரிய திருமொழி.584
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1531
பாசுரம்
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. (6.9.4)
பெரிய திருமொழி.585
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1532
பாசுரம்
அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. (6.9.5)
பெரிய திருமொழி.586
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1533
பாசுரம்
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே. (6.9.6)
பெரிய திருமொழி.587
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1534
பாசுரம்
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. (6.9.7)
பெரிய திருமொழி.588
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1535
பாசுரம்
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. (6.9.8)
பெரிய திருமொழி.589
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1536
பாசுரம்
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. (6.9.9)
பெரிய திருமொழி.590
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1537
பாசுரம்
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே (6.9.10)
பெரிய திருமொழி.591
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1538
பாசுரம்
கிடந்த நம்பி குடந்தை மேவிக்
கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை
உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்
நமோநா ராயணமே (6.10.1)
பெரிய திருமொழி.592
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1539
பாசுரம்
விடந்தா னுடைய அரவம் வெருவச்
செருவில் முனநாள்,முன்
தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு
மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழ லாகி
உலகை யீரடியால்
நடந்தா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே (6.10.2)
பெரிய திருமொழி.593
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1540
பாசுரம்
பூணா தனலும் தறுகண் வேழம்
மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட
பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல்
ஆய்ச்சி தயிர்வெண்ணெய்
நாணா துண்டான் நாமம் சொல்லில்
நமோநா ராயணமே (6.10.3)