Responsive image

பெரிய திருமொழி.564

பாசுர எண்: 1511

பாசுரம்
ஓளியா வெண்ணெ யுண்டானென்
றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக்
காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.4)

பெரிய திருமொழி.565

பாசுர எண்: 1512

பாசுரம்
வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.5)

பெரிய திருமொழி.566

பாசுர எண்: 1513

பாசுரம்
வள்ளி கொழுநன் முதலாய
மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன்
வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட
பகுவா யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6.7.6)

பெரிய திருமொழி.567

பாசுர எண்: 1514

பாசுரம்
மிடையா வந்த வேல்மன்னர்
வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர்
கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து
வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.7)

பெரிய திருமொழி.568

பாசுர எண்: 1515

பாசுரம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு
சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.8)

பெரிய திருமொழி.569

பாசுர எண்: 1516

பாசுரம்
ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமே லணிந்து,உடலம்
நீறும் பூசி யேறூரும்
இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர்
வரைமார் வகலத் தளித்துகந்தான்
நாறும் பொழில்சூழ்ந் தழகாய
நறையூர் நின்ற நம்பியே (6.7.9)

பெரிய திருமொழி.570

பாசுர எண்: 1517

பாசுரம்
நன்மை யுடைய மறையோர்வாழ்
நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்
கலிய னொலிசெய் தமிழ்மாலை
பன்னி யுலகில் பாடுவார்
பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய்
வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10)

பெரிய திருமொழி.571

பாசுர எண்: 1518

பாசுரம்
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1)

பெரிய திருமொழி.572

பாசுர எண்: 1519

பாசுரம்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டே னே (6.8.2)

பெரிய திருமொழி.573

பாசுர எண்: 1520

பாசுரம்
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3)

Enter a number between 1 and 4000.