பெரிய திருமொழி.534
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1481
பாசுரம்
கொம்பும் அரவமும் வல்லியும்
வெண்றனுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச
லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி
யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.4)
பெரிய திருமொழி.535
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1482
பாசுரம்
விலங்கும் கயலும் வேலுமொண்
காவியும் வெண்றகண்
சலம்கொண்ட சொல்லார் தாங்கள்
சிரித்திக ழாதமுன்,
மலங்கும் வராலும் வாளையும்
பாய்வயல் சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.5)
பெரிய திருமொழி.536
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1483
பாசுரம்
மின்னே ரிடையார் வேட்கையை
மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த
தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க
இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.6)
பெரிய திருமொழி.537
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1484
பாசுரம்
வில்லேர் நுதலார் வேட்கையை
மாற்றிச் சிரித்து, இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்
புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி
யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.7)
பெரிய திருமொழி.538
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1485
பாசுரம்
வாளொண்கண் ணல்லார் தாங்கள்
மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு
கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி
லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.8)
பெரிய திருமொழி.539
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1486
பாசுரம்
கனிசேர்ந் திலங்குநல் வாயவர்
காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில்
த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி
கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.9)
பெரிய திருமொழி.541
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1488
பாசுரம்
கலங்க முந்நீர் கடைந்தமு
தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு
சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச்
சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர்
வாழும் நறையூரே (6.5.1)
பெரிய திருமொழி.542
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1489
பாசுரம்
முனையார் சீய மாகி
அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட
வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம்f செந்தளிர்
கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ
காய நறையூரே (6.5.2)
பெரிய திருமொழி.543
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1490
பாசுரம்
ஆனைப் புரவி தேரொடு
காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி
யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும்
மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை
யொளிக்கும் நறையூரே (6.5.3)