Responsive image

பெரிய திருமொழி.524

பாசுர எண்: 1471

பாசுரம்
சாந்தேந்து மென்முலை யார்தடந்
தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநகரத்
தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே.
உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன்
திருவிண் ணகரானே (6.3.4)

பெரிய திருமொழி.525

பாசுர எண்: 1472

பாசுரம்
மற்றோர் தெய்வமெண்ணே
னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும்
பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ
ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே.
திருவிண் ணகரானே (6.3.5)

பெரிய திருமொழி.526

பாசுர எண்: 1473

பாசுரம்
மையொண் கருங்கடலும்
நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும்
இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே
_ண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன்
திருவிண் ணகரானே (6.3.6)

பெரிய திருமொழி.527

பாசுர எண்: 1474

பாசுரம்
வேறே கூறுவதுண்
டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா
தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால்
குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால்
திருவிண் ணகரானே (6.3.7)

பெரிய திருமொழி.528

பாசுர எண்: 1475

பாசுரம்
முளிதீந்த வேங்கடத்து
மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல்
வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா,
லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது?
திருவிண் ணகரானே (6.3.8)

பெரிய திருமொழி.529

பாசுர எண்: 1476

பாசுரம்
சொல்லாய் திருமார்வா
உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை வினைகள்
நலியாமை நம்புநம்பீ,
மல்லாகுடமாடி.
மதுசூத னே உலகில்
செல்லா நல்லிசையாய்
திருவிண் ணகரானே (6.3.9)

பெரிய திருமொழி.530

பாசுர எண்: 1477

பாசுரம்
தாரார் மலர்க்கமலத்
தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில்
திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக்
கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார்
அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10)

பெரிய திருமொழி.531

பாசுர எண்: 1478

பாசுரம்
கண்ணும் சுழன்று பீளையோ
டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் பைய
நடமின் என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும்
வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.1)

பெரிய திருமொழி.532

பாசுர எண்: 1479

பாசுரம்
கொங்குண் குழலார் கூடி
யிருந்து சிரித்து, நீர்
இங்கென்னிருமி யெம்பால்
வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட
ராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.2)

பெரிய திருமொழி.533

பாசுர எண்: 1480

பாசுரம்
கொங்கார் குழலார் கூடி
யிருந்து, சிரித்து, எம்மை
எங்கோலம் ஐயா என்னினிக்
காண்பதென் னாதமுன்
செங்கோல் வலவன் தான்பணிந்
தேத்தித் திகழுமூர்,
நங்கோன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.3)

Enter a number between 1 and 4000.