Responsive image

பெரிய திருமொழி.504

பாசுர எண்: 1451

பாசுரம்
நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.4)

பெரிய திருமொழி.505

பாசுர எண்: 1452

பாசுரம்
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங்
கோரெழுத் தோருரு வானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.5)

பெரிய திருமொழி.506

பாசுர எண்: 1453

பாசுரம்
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.6)

பெரிய திருமொழி.507

பாசுர எண்: 1454

பாசுரம்
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்
இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்
இருக்கினி லின்னிசை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.7)

பெரிய திருமொழி.508

பாசுர எண்: 1455

பாசுரம்
காதல்செய் திளையவர் கலவிதரும்
வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான்.
போதலார் நெடுமுடிப் புண்ணியனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.8)

பெரிய திருமொழி.509

பாசுர எண்: 1456

பாசுரம்
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்
காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர்
ஆதல்செய் மூவுரு வானவனே.,
ஆண்டாய் உனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே. (6.1.9)

பெரிய திருமொழி.510

பாசுர எண்: 1457

பாசுரம்
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே
(6.1.10)

பெரிய திருமொழி.511

பாசுர எண்: 1458

பாசுரம்
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு
ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட
னாயின வாயிலொட்டி
அறுத்தேன், ஆர்வச்செற் றமவை
தன்னை மனத்தகற்றி
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.1)

பெரிய திருமொழி.512

பாசுர எண்: 1459

பாசுரம்
மறந்தே னுன்னைமுன்னம fமறந்
தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத
னாலிடும் பைக்குழியில்
பிறந்தே யெய்த்தொழிந்
தேன்பெ ருமானே திருமார்பா
சிறந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.2)

பெரிய திருமொழி.513

பாசுர எண்: 1460

பாசுரம்
மானெய் நோக்கியர் தம்வயிற்
றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேராக்கை தன்னை உ<த
வாமை யுணர்ந்துணர்ந்து,
வானே மானில மே வந்து
வந்தென் மனத்திருந்த
தேனே, நின்னடைந் தேன்திரு
விண்ண்ணகர் மேயவனே (6.2.3)

Enter a number between 1 and 4000.