பெரிய திருமொழி.494
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1441
பாசுரம்
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.4)
பெரிய திருமொழி.495
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1442
பாசுரம்
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.5)
பெரிய திருமொழி.496
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1443
பாசுரம்
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.6)
பெரிய திருமொழி.497
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1444
பாசுரம்
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.7)
பெரிய திருமொழி.498
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1445
பாசுரம்
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.8)
பெரிய திருமொழி.499
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1446
பாசுரம்
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.9)
பெரிய திருமொழி.500
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1447
பாசுரம்
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே (5.10.10)
பெரிய திருமொழி.501
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1448
பாசுரம்
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று
அங்கண்டமொ டகலிட மளந்தவனே.
ஆண்டாயுனைக் கான்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.1)
பெரிய திருமொழி.502
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1449
பாசுரம்
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும்
பெண்ணமு துண்டவெம் பெருமானே .
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.2)
பெரிய திருமொழி.503
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1450
பாசுரம்
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட
தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம்
விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங்
கழல்நிற அம்பது வானவனே.
ஆண்டாயுன்னைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.3)