Responsive image

பெரிய திருமொழி.484

பாசுர எண்: 1431

பாசுரம்
ஊனமர் தலையொன் றேந்தி
உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய்,
என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம்
வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4)

பெரிய திருமொழி.485

பாசுர எண்: 1432

பாசுரம்
வக்கரன் வாய்முன் கீண்ட
மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய்,
என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி
நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த்
தலைவன்தா ளடைந்துய்ந் தேனே (5.9.5)

பெரிய திருமொழி.486

பாசுர எண்: 1433

பாசுரம்
விலங்கலால் கடல டைத்து
விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன்
இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6)

பெரிய திருமொழி.487

பாசுர எண்: 1434

பாசுரம்
வெண்ணெய்தா னமுது செய்ய
வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால்
கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
வாய்மொழிந் துய்ந்த வாறே (5.9.7)

பெரிய திருமொழி.488

பாசுர எண்: 1435

பாசுரம்
அம்பொனா ருலக மேழும்
அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம்
கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.8)

பெரிய திருமொழி.489

பாசுர எண்: 1436

பாசுரம்
நால்வகை வேத மைந்து
வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க
வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச்
செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை
யாளியென் சிந்தை யானே (5.9.9)

பெரிய திருமொழி.490

பாசுர எண்: 1437

பாசுரம்
வண்டறை பொழில்தி ருப்பேர்
வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக்
கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன்
செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக்
கூடுவார் நீள்வி சும்பே (5.9.10)

பெரிய திருமொழி.491

பாசுர எண்: 1438

பாசுரம்
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.1)

பெரிய திருமொழி.492

பாசுர எண்: 1439

பாசுரம்
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.2)

பெரிய திருமொழி.493

பாசுர எண்: 1440

பாசுரம்
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின் றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.3)

Enter a number between 1 and 4000.