Responsive image

பெரிய திருமொழி.434

பாசுர எண்: 1381

பாசுரம்
விளைத்த வெம்போர் விறல்வா
ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை
யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு
மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.4)

பெரிய திருமொழி.435

பாசுர எண்: 1382

பாசுரம்
வம்புலாம் கூந்தல் மண்டோதரி
காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த
அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும்
வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.5)

பெரிய திருமொழி.436

பாசுர எண்: 1383

பாசுரம்
கலையு டுத்த அகலல்குல்
வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண்
டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப்
பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.6)

பெரிய திருமொழி.437

பாசுர எண்: 1384

பாசுரம்
கஞ்சன் நெஞ்சும் கடுமல்
லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி
யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ
டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும்
கமழும்தென் னரங்கமே (5.4.7)

பெரிய திருமொழி.438

பாசுர எண்: 1385

பாசுரம்
ஏன மீனா மையோடு
அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித்
தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப்
புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன்
னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8)

பெரிய திருமொழி.439

பாசுர எண்: 1386

பாசுரம்
சேய னென்றும் மிகப்பெரியன்
நுண்ணேர்மையி னாய,இம்
மாயையை ஆரு மறியா
வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும்
கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந்
தழகார்தென் னரங்கமே (5.4.9)

பெரிய திருமொழி.440

பாசுர எண்: 1387

பாசுரம்
அல்லி மாத ரமரும்
திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங்
கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி
ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு
பின்வானுல காள்வரே (5.4.10)

பெரிய திருமொழி.441

பாசுர எண்: 1388

பாசுரம்
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .
வேங்கடமே . எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
ஒலிதிரைநீர்ப் பௌவங் ெ காண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1)

பெரிய திருமொழி.442

பாசுர எண்: 1389

பாசுரம்
கலையாளா வகலல்குல் கனவளையும்
கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ
வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.2)

பெரிய திருமொழி.443

பாசுர எண்: 1390

பாசுரம்
மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின்
திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு
நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.3)

Enter a number between 1 and 4000.