Responsive image

பெரிய திருமொழி.414

பாசுர எண்: 1361

பாசுரம்
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே (5.2.4)

பெரிய திருமொழி.415

பாசுர எண்: 1362

பாசுரம்
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே (5.2.5)

பெரிய திருமொழி.416

பாசுர எண்: 1363

பாசுரம்
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே (5.2.6)

பெரிய திருமொழி.417

பாசுர எண்: 1364

பாசுரம்
கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே (5.2.7)

பெரிய திருமொழி.418

பாசுர எண்: 1365

பாசுரம்
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே (5.2.8)

பெரிய திருமொழி.419

பாசுர எண்: 1366

பாசுரம்
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே (5.2.9)

பெரிய திருமொழி.420

பாசுர எண்: 1367

பாசுரம்
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே (5.2.10)

பெரிய திருமொழி.421

பாசுர எண்: 1368

பாசுரம்
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்
வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
வெள்ளறை நின்றானே (5.3.1)

பெரிய திருமொழி.422

பாசுர எண்: 1369

பாசுரம்
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய
மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
ெ வள்ளறை நின்றானே (5.3.2)

பெரிய திருமொழி.423

பாசுர எண்: 1370

பாசுரம்
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்
உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே
எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண்
தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
வெள்ளறை நின்றானே (5.3.3)

Enter a number between 1 and 4000.