Responsive image

பெரிய திருமொழி.404

பாசுர எண்: 1351

பாசுரம்
வெற்பால் மாரி பழுதாக்கி
விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம்
கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.4)

பெரிய திருமொழி.405

பாசுர எண்: 1352

பாசுரம்
மையார் தடங்கண் கருங்கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த
நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச்
செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.5)

பெரிய திருமொழி.406

பாசுர எண்: 1353

பாசுரம்
மின்னி னன்ன நுண்மருங்குல்
வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள்
ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.6)

பெரிய திருமொழி.407

பாசுர எண்: 1354

பாசுரம்
குடையா விலங்கல் கொண்டேந்தி
மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன்
தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக்
கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.7)

பெரிய திருமொழி.408

பாசுர எண்: 1355

பாசுரம்
கறையார் நெடுவேல் மறமன்னர்
வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.8)

பெரிய திருமொழி.409

பாசுர எண்: 1356

பாசுரம்
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.9)

பெரிய திருமொழி.410

பாசுர எண்: 1357

பாசுரம்
கற்றா மறித்து காளியன்றன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன்
புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச்
சோர நில்லா துயர்தாமே (5.1.10)

பெரிய திருமொழி.411

பாசுர எண்: 1358

பாசுரம்
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)

பெரிய திருமொழி.412

பாசுர எண்: 1359

பாசுரம்
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)

பெரிய திருமொழி.413

பாசுர எண்: 1360

பாசுரம்
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)

Enter a number between 1 and 4000.